Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிராம நத்தம் நிலம் தங்கத்திற்கு சமம்! நிலத்தை விற்க முடியலையா? லோன் கிடைப்பதில் அரசு வைத்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பலருக்கு நத்தம் நிலத்தை விற்பதிலோ அல்லது அதன் மீது கடன் வாங்குவதிலோ சிக்கல்கள் இருக்கும்.. நத்தம் நிலத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? சாதாரணப் பட்டாவிற்கும் நத்தம் பட்டாவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? போன்ற சந்தேகங்களும் இருக்கலாம்.. அவைகளை பற்றி இங்கே சுருக்கமாக தெரிந்து கொள்வோம்..

தமிழகத்தில் நிலப்பரப்புகள் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.. அதில் "கிராம நத்தம்" என்பது மிகவும் தனித்துவமானது.. முன்னோர்கள் காலத்தில் கிராமங்களில் மக்கள் குடியிருப்பதற்காக அரசு பிரத்யேகமாக ஒதுக்கிய நிலமே கிராம நத்தம் என்று அழைக்கப்படுகிறது..

Grama Natham Land Rules

விவசாய நிலங்கள்

பொதுவாக, விவசாய நிலங்களை வாங்கும்போதும் விற்கும்போதும் காட்டும் ஆர்வத்தை, மக்கள் நத்தம் நிலங்கள் விஷயத்தில் காட்டுவதில்லை.. ஆனால், சமீபகாலமாக இந்த நிலங்கள் தொடர்பான உரிமையியல் சிக்கல்களும், பட்டா நடைமுறைகளும் பேசுபொருளாகியுள்ளன..

சாதாரண பட்டாவிற்கும் நத்தம் பட்டாவிற்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.. சாதாரண நிலங்கள் அரசின் வருவாய்ப் பதிவேடுகளில் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, அதன் உரிமையாளர் யார் என்பது தெளிவாக இருக்கும்..

கிராம நத்தம் நிலம்

ஆனால், நத்தம் நிலங்கள் என்பவை ஆண்டாண்டு காலமாக மக்கள் குடியிருந்து வரும் இடங்கள்.. இந்த நிலங்கள் அரசு குடியிருப்புக்காக ஒதுக்கிய வகை நிலங்களாகும்; அவை தானாகவே முழுமையான தனிநபர் சொத்தாக மாறிவிடாது.. அதே சமயம், உரிமை தொடர்பான ஆவணங்கள் சில நேரங்களில் முழுமையாக இல்லாமல் இருக்கலாம்.. இதனால், நத்தம் நிலத்தை விற்கும்போதோ அல்லது தானமாக வழங்கும்போதோ சிக்கல்கள் எழுகின்றன..

பொதுமக்களிடையே இருக்கும் மிகப்பெரிய கேள்வி, "நத்தம் நிலத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா?" என்பதுதான்.. சரியான பட்டா மற்றும் தேவையான ஆவணங்கள் இருந்தால் சில வங்கிகள் கடன் வழங்குகின்றன.. ஆனால், சில கண்டிஷன்கள் உண்டு..

தூய பட்டா, தோராய பட்டா

நத்தம் நிலத்திற்கு உங்களிடம் தோராயப் பட்டா மட்டுமே இருந்தால் பல வங்கிகள் கடன் வழங்க தயங்கும்.. நத்தம் நில அளவைக்குப் பிறகு வழங்கப்படும் தூய பட்டா அல்லது நத்தம் நிலவரித் திட்ட பட்டா உங்கள் கையில் இருந்தால் மட்டுமே பெரும்பாலான தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கடன் பரிசீலனை செய்யும்..

குறிப்பாக, அந்த நிலத்தின் எல்லைகள் சரியாக அளக்கப்பட்டு, உட்பிரிவு அதாவது சப்-டிவிஷன் செய்யப்பட்டிருப்பது அவசியம்.. மேலும், வரி ரசீதுகள், EC, மற்றும் கட்டிட அங்கீகாரம் போன்ற ஆவணங்களும் தேவைப்படலாம்..

அரசாங்கத்தின் சமீபத்திய அறிவிப்புகள் நத்தம் நில உரிமையாளர்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளன.. பழைய கிராம நத்தம் நிலங்களை வரன்முறைப்படுத்தவும், அவற்றுக்கு ஆன்லைன் மூலமாகப் பட்டா வழங்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது..

நத்தம் பட்டாக்கள்

முன்பெல்லாம் நத்தம் பட்டாக்கள் காகித வடிவில் மட்டுமே இருந்தன.. இப்போது அவை கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன.. உங்கள் நிலம் நத்தம் என்று தெரிந்தால், உடனே இ-சேவை மையம் மூலம் அதன் தற்போதைய நிலையை சரிபார்ப்பது நல்லது.. ஒருவேளை ஆக்கிரமிப்பு நிலமாகவோ அல்லது "புறம்போக்கு" என்று வகைப்படுத்தப்பட்டிருந்தாலோ, எதிர்காலத்தில் அந்த இடத்தை விற்கவோ, அடமானம் வைக்கவோ சிக்கல் ஏற்படலாம்..

நாம் கவனிக்க வேண்டியது ஒன்றுதான்.. நத்தம் நிலம் என்பது உழைக்கும் மக்களின் வாழ்வாதார சொத்து.. அதில் உள்ள சட்டச் சிக்கல்களை தவிர்க்க, முறையான நத்தம் நிலவரித் திட்ட பட்டாவைப் பெறுவது ஒவ்வொருவரின் கடமையாகும்.. முறையான ஆவணங்கள் கைவசம் இருந்தால், நத்தம் நிலமும் தங்கத்திற்கு இணையான மதிப்புடையதுதான் என்பதில் கொஞ்சம் கூட டவுட் வேண்டாம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+