தங்கம் நகைக்கு "கிரைண்டர் ஆப்" ஆப்பு.. பாத்ரூமில் சிக்கிய பிரபலம் வாரிசு! உல்லாசத்தால் 31 பவுன் போச்
சென்னை: சென்னை புறநகரில் கொள்ளை சம்பவங்கள் பெருகி வருகின்றன.. கடந்த 2 நாட்களில் மட்டும், அண்ணா நகர், கொட்டிவாக்கம், சைதாப்பேட்டை, திருப்போரூர் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்களில், 216 சவரன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை நடந்துள்ளது. இதில், சென்னை, எம்கேபி நகரில் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த ஜவுளிக்கடைக்காரரை, கட்டிப்போட்டு அவரிடருந்து 31 சவரன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து மர்ம கும்பல் தப்பியுள்ளது பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.
தமிழகத்தில் போதை பொருள் விற்பனை கடந்த சில மாதங்களாகவே அதிகரித்தபடி உள்ளது. இதனால், பள்ளிகள் கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், கோவில்கள் என முக்கிய பகுதிகளின் அருகிலேயே போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் மலிந்து வருகின்றன..

கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதற்கு இந்த போதைப்பொருட்கள்தான் காரணம் என்று எதிர்க்கட்சிகளும் குற்றஞ்சாட்டி வருவதுடன், போதைப்பொருள் விற்பனையை தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை விடுத்து வருகின்றன.
கிரைண்டர் மொபைல் ஆப்
அதற்கேற்றபடி தமிழக அரசும், சென்னை உள்ளிட்ட பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய, சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இதற்கெனவே போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், அதிரடியாக கைது செய்யப்பட்டும் வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் சமீபத்தில், சென்னை காவல் ஆணையர் அருண், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.. அதில் டேட்டிங் செயலியாக உள்ள கிரைண்டர் மொபைல் ஆப்பை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.. ஏனென்றால், போதைப்பொருள் விற்பனைக்கு கிரைண்டர் ஆப் அதிகமாக பயன்படுத்தப்படுவதால், அதனை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொண்டிருந்தார்.
உல்லாச பொழுது
இந்நிலையில், கிரைண்டர் ஆப் பயன்படுத்தி சென்னையில் நடந்துள்ள கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.. சென்னை வியாசர்பாடி எம்கேபி. நகர் 3வது லிங்க் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஹித்தேஷ்.. இவருக்கு 26 வயதாகிறது.. சொந்தமாக துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார்..
இந்நிலையில், இவரது பெற்றோர் ராஜேஷ் - தாய் இருவரும், உறவினர் திருமணத்துக்காக பெங்களூர் சென்றிருக்கிறார்கள். வீட்டில் அப்பா, அம்மா இல்லாததால், ஜாலியாக பொழுதை கழிக்க விரும்பினார் ஹித்தேஷ்.. இதற்காக கிரைண்டர் ஆப் மூலம் ஏற்கனவே பழக்கமான நபர் ஒருவரை ஓரின சேர்க்கைக்காக தன்னுடைய வீட்டிற்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆட்டோவில் வந்த 2 ஆண்கள் 1 பெண்
பிறகு சிறிது நேரத்தில் ஹித்தேஷ் வீட்டுக்கு 2 ஆண், 1 பெண் என 3 பேரும் ஆட்டோவில் வந்துள்ளனர். ஆட்டோவில் வந்த 2 பேரும் அந்த பெண்ணுடன் ஜாலியாக இருந்துள்ளனர். அத்துடன், ஹித்தேஷை கட்டிப்போட்டு விட்டு மீண்டும் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். இறுதியாக, ஹித்தேஷை பாத்ரூமில் அடைத்துவைத்துவிட்டு அவரது வீட்டிலிருந்து 31 சவரன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்களை எடுத்து சென்றுவிட்டனர்.
அடைபட்டு கிடந்த ஹித்தேஷ் வெளியே வர முடியாமல், பாத்ரூமிலிருந்தே போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, எம்கேபி.நகர் போலீசார் விரைந்து வந்து ஹித்தேஷை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கிரைண்டர் ஆப் நம்பர்
நகை திருடிபோயிருப்பதாக கூறப்படுவதால், அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர்.. அப்போது ஆட்டோவில் இரண்டு ஆண், ஒரு பெண் வந்து சென்றது பதிவாகியுள்ளது. இதை வைத்து அவர்கள் யார் என்பது குறித்தும், ஆட்டோவின் பதிவெண் மற்றும் கிரைண்டர் செயலியில் வந்த நபர்களின் செயல்பாடுகள் குறித்தும் விசாரணை நடத்துகிறார்கள்.
ஆனால், நகைகள் திருடு போனது குறித்து ஹித்தேஷ் மாறி, மாறி பேசுகிறாராம்.. எனவே, நிஜமாகவே நகைகள் திருட்டுப்போனதா? குறைவாக நகைகள் திருட்டுப்போயுள்ளதா? என்ற விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications