நோன்பு வழிபாட்டுக்கு வைத்த ஒரு ஜோடி வைர கம்மலை தவறவிட்ட பெண்.. பின்னர் நடந்தது என்ன?
குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நோன்பு பூஜையில் வைத்தது தெரியாமல் ஒரு ஜோடி வைர கம்மல் குப்பையில் வீசப்பட்டது.
குடியாத்தம் பல்மநேர் ரோடு அம்பேத்கர் சிலை அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் கல்பனா. இவர் நேற்றைய தினம் குடும்பத்துடன் வீட்டில் கேதார கௌரி நோன்பு வழிபாட்டை நடத்தினார்.
தீபாவளிக்குயையொட்டி வரும் அமாவாசையின் போது இந்த நோன்பு எடுக்கப்படுகிறது. இந்த பூஜையின் போது பணம், நகை உள்ளிட்டவை வைத்து பூஜை செய்வது வழக்கம். அந்த வகையில் கல்பனா தனது ஒரு ஜோடி வைரக் கம்மலை வைத்து பூஜை செய்துள்ளார்.

பூஜை அறை
இதையடுத்து இன்று காலை பூஜை அறையை சுத்தம் செய்த போது அங்கிருந்த வாடிய பூக்கள், பூஜை பொருட்களை சேகரித்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு தனது வீட்டருகே இருக்கும் குப்பை சேகரிக்கும் பகுதியில் போட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து பூஜை அறையில் இருந்த நகைகளை ஒவ்வொன்றாக செக் செய்து பேக் செய்தார்.

வைர கம்மல்
அப்போது வைர கம்மலை காணாமல் அதிர்ச்சியுள்ளார். இதையடுத்து பூஜை அறையில் தேடினார், கிடைக்கவில்லை. மேலும் வீடு முழுவதும் தேடிவிட்டார். ஆனாலும் அந்த வைரத்தோடு கிடைக்கவில்லை. அப்போதுதான் பூஜையை அறையை சுத்தம் செய்து ஒரு பிளாஸ்டிக் கவரி போட்டு குப்பை சேகரிக்கும் இடத்தில் போட்டது தெரியவந்தது.

குப்பை கிடங்கு
உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது குப்பைகளை தூய்மை பணியாளர்கள் சேகரித்து வாகனத்தில் ஏற்றிக் கொண்டு குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்றது தெரியவந்தது. உடனே பதறி அடித்துக் கொண்டு குடியாத்தம் நகர்மன்றத் தலைவர் எஸ் சவுந்தரராஜனுக்கு தகவல் தெரிவித்தார்.

நகர்மன்றத் தலைவர்
இதையடுத்து நகர்மன்றத் தலைவர் உடனடியாக அப்பகுதியின் தூய்மை பணியாளர்களை தொடர்பு கொண்டு குப்பைகளை சேகரித்த வாகனம் எங்கே இருக்கிறது என்ற விவரத்தை கேட்டுள்ளார். குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குப்பை வண்டி
உடனே அந்த குப்பை வண்டியை குப்பைகள் சேகரிக்கும் இடத்திற்கு கொண்டு வருமாறு தெரிவித்தார். அங்கு ஒவ்வொரு பிளாஸ்டிக் கவராக சோதனை செய்யப்பட்டது. அதில் கல்பனா தனது வீட்டில் கொட்டிய பிளாஸ்டிக் பையின் கடை விளம்பரத்தை நினைவுப்படுத்தி ஒரு கவரை காட்டி அதைத்தான் தான் தூக்கி எறிந்ததாக தெரிவித்தார்.

மகிழ்ச்சி
இதையடுத்து அந்த பையில் இருந்த குப்பைகளை கீழே கொட்டி பார்த்தனர். அப்போது அதில் வைர கம்மல் இருந்தது. இதை பார்த்ததும் கல்பனா மகிழ்ச்சி அடைந்தார். நகர்மன்றத் தலைவருக்கு நன்றியையும் தெரிவித்தார். தூய்மை பணியாளர்களுக்கும் நன்றி சொல்லிவிட்டு அவர் கம்மலை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications