அந்த அரசியல் தலைவரை எந்த காலத்திலும் நம்பாதீங்கன்னு சொன்னார் கருணாநிதி.. ராமதாஸ் போட்ட பரபர ட்வீட்
சென்னை: தமிழக மூத்த அரசியல் தலைவர் ஒருவர் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்குவர். நாட்டின் பிரச்சனைகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் இடைவிடாமல் கருத்துகளை தெரிவித்து வருகிறார் டாக்டர் ராமதாஸ்.

ராமதாஸின் ட்வீட்
இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் Guess Who? என்ற படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ். அதில் கூறப்பட்டுள்ளதாவது: திமுக தலைவர் கலைஞரும், நானும் அவரது இல்லத்தில் ஒரு நாள் தனியாக உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு மூத்த அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிட்ட கலைஞர், அவரை மட்டும் எந்த காலத்திலும் நம்பி விடாதீர்கள் என்று கூறினார்.

உங்கள் யூகம்
அவர் யார் என்பதை உங்களின் யூகத்துக்கே விட்டு விடுகிறேன். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பதிவிட்டிருக்கிறார். அவரது கேள்விக்கு பதிலாக பல்வேறு தலைவர்களின் பெயர்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருவதால் ட்விட்டர் பக்கம் அதகளமாகிக் கொண்டிருக்கிறது. நெட்டிசன்களின் இந்த பதில்கள் கட்சிகளிடையே ஆகப் பெரும் அக்கப்போரை வரவழைத்துவிடும் போல இருக்கிறது. இதில் சில நெட்டிசன் பதிவுகள்:

இதுதான் தலைமைப் பண்பா?
@Am_Indran (இந்தரன்) என்ற பதிவர் ராமதாஸுக்கு பதிலளித்து போட்டுள்ள ட்வீட்டில் கூறியுள்ளதாவது: ஒரு தலைவர் மறைந்த பிறகு அவர் தன்னிடம் தனியாக கூறியதாக பூடகமாக கிசு கிசு கதை விடுவது எந்தக் கணக்கில் வரும்?? இதெல்லாம் தலைமை பண்புக்கு தகுமா?? என கேள்வி கேட்டிருக்கிறார்.

இப்பதிவு தேவையா?
வை.தன்ராஜ் ரஞ்சித் @DhanrajRanjith என்ற ட்வீட்டிஸ்ட் பதிவிட்டுள்ளதாவது: இன்று தமிழ்நாட்டில் 1000 பிரிச்சனைகள் உள்ள நிலையில் இந்த பதிவு தேவையா மருத்துவர்? முதலில் உங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளவும்! என விமர்சனத்துடன் கூறியிருக்கிறார். RAJKUMARBHEEMAN @rajkumarbheema1 என்பவர், இருக்கட்டும் ஐயா. அதை இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன என கேள்வி கேட்டுள்ளார்.

இன்னும் எத்தனையோ?
PAT BALA @PatBalaboss7345 என்ற நெட்டிசன், அதே மாதிரி நிறைய பேர் கிட்டையும் கதை சொல்லிருப்பாரு.அரசியல் சாணக்கியர் நா சும்மாவா .. இன்னும் எத்தனை கதை யார் யார் சொல்லப் போறங்களோ
-
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
காலரில் என்னங்க இது.. அமைச்சரானதும் வன்னியரசும் இப்படி இறங்கிட்டாரே.. விசிகவிற்கு இது புதுசு -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
திமுக கூட்டணி தற்போது இல்லை.. 3 மாதம் கூட தவெக ஆட்சி தாங்காது என்பதா? கொந்தளித்த சிபிஎம் சண்முகம்











Click it and Unblock the Notifications