சொகுசு பங்களா.. 'அதற்கு' மறுத்த இளம்பெண்....நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டு கொலை.. வாலிபர் வாக்குமூலம்
சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே காப்புக் காட்டில் பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில், ஆசைக்கு இணங்க மறுத்ததால் இளம் பெண்ணை கொன்று புதைத்துவிட்டோம் என கள்ளக்காதலனின் நண்பர் போலீசிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து கள்ளக்காதலன் மற்றும் உதவிய மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Recommended Video
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பூவலம்பேடு ஊராட்சி, வாணியமல்லி காப்பு காடு உள்ளது. இங்கு அழுகிய நிலையில் பெண் சடலத்தை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாதிரிவேடு போலீசார் கைப்பற்றினர். இதை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்கள்.
இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்கள். விசாரணையில் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த விக்ரம் என்பவரின் தங்கை பிரியங்கா (34). என்பது தெரியவந்தது. பிரியங்கா திருமணமாகி கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

பிரியங்கா வேலை
இந்நிலையில் சென்னை மாதவரத்தை சேர்ந்த காட்வின் டொமினிக் என்பவர் வாணியமல்லி காப்பு காடு அருகே நாய் பண்ணை நடத்தி வந்துள்ளார். இவரது பண்ணையில் பிரியங்கா பராமரிப்பு பணியில் சேர்ந்து வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியங்கா கடந்த ஒரு மாதமாக அவரது அண்ணன் விக்ரமுக்கு தொலைப்பேசியில் பேசாமல் இருந்துள்ளார். அவர் குறித்து எந்த தகவலும் இல்லை.

போலீஸ் தனிப்படை
இதனால் விக்ரம்,கடந்த சில நாட்களுக்கு முன் ஆன்லைன் மூலமாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்கணிப்பாளருக்கு தனது தங்கை பிரியங்கா காணாமல் போனது குறித்து புகார் அளித்துள்ளார். இதனிடையே ஒரு சிறுவன் கொடுத்த தகவலின்பேரில் காப்பு காட்டு பகுதியில் பிரியங்காவின் சடலத்தை போலீசார் கைப்பற்றினார்கள். இதையடுத்து, டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் 2 தனிப்படை போலீசார் மெர்லின் (19) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

குற்றவாளி வாக்குமூலம்
அப்போது மெர்லின் போலீசிடம் கூறுகையில், "நாய் பண்ணை அருகே சொகுசு வீட்டில் விஜய் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கும் பிரியங்காவுக்கு கள்ளத்தொடர்பு இருந்தது. கடந்த மாதம் பிரியங்காவை செல்போனில் விஜய் ஆனந்த் அழைத்தார். இதன்பேரில் பிரியங்கா விஜய் ஆனந்த்தின் வீட்டிற்கு சென்றார். ஆனால் அவரது ஆசைக்கு இணங்க பிரியங்கா அப்போது மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜய் ஆனந்த் அங்குள்ள நீச்சல்குளத்தில் பிரியங்காவை தள்ளிவிட்டார். இதில் பிரியங்கா மூச்சுத்திணறி இறந்து போனார். பின்னர் அவரும், நானும், நாயர் என்பவருடன் சேர்ந்து, நாய் பண்ணை அருகே பிரியங்காவின் சடலத்தை பள்ளம் தோண்டி புதைத்துவிட்டோம்." என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

போலீசார் வலைவீச்சு
மெர்லினின் வாக்குமூலத்தை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான பிரியங்காவின் கள்ளக்காதலன் விஜய் ஆனந்த், நாயர் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகிறார். இளம் பெண்ணை ஆசைக்கு இணங்க மறுத்ததால் கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,












Click it and Unblock the Notifications