சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் -ஆடிட்டர் குருமூர்த்தி பரபரப்பு பேச்சு
சென்னை: திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் சசிகலாவையும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார் துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி.
Recommended Video

சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 51-வது ஆண்டு விழாவில் பேசிய அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
பாஜக தேசியத் தலைவர் நட்டா முன்னிலையில் ஆடிட்டர் குருமூர்த்தி அதிமுக தலைமைக்கு முன்வைத்துள்ள இந்தக் கோரிக்கை தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

51-வது ஆண்டுவிழா
துக்ளக் இதழின் 51-வது ஆண்டுவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அந்த இதழின் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி, திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் சசிகலா போன்றோரையும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இவரது இந்தப் பேச்சு அதிமுக தலைமைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தேசியம்
அதிமுக இல்லை என்றால் தமிழகத்தில் ஆன்மிகமும், தேசியமும் இருந்திருக்காது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல ஆளுமை உள்ளதாகவும் குருமூர்த்தி கூறியிருக்கிறார். தேசியத்தை விரும்புகிறவர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். ரஜினி அரசியலுக்கு முழுக்கு போட்டதை தொடர்ந்தே குருமூர்த்தி இத்தகைய கருத்துக்களை கூறியுள்ளதாகவும், அவர் மட்டும் அரசியலுக்கு வந்திருந்தால் குருமூர்த்தியின் பேச்சு தொணியே வேறு மாதிரி அமைந்திருக்கும் எனவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

திமுக ஆட்சி
ஆடிட்டர் குருமூர்த்தியின் கருத்தை வைத்து கவனித்தால் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அவர் மிக உறுதியாக இருப்பதை அறிய முடிகிறது. இதன் காரணமாகவே சசிகலாவை சேர்த்துக்கொள்ள வேண்டும் என பொதுவெளியிலேயே அதிமுக தலைமைக்கு பகிரங்க கோரிக்கையை வைத்திருக்கிறார். குருமூர்த்தியின் கருத்தை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஏற்பார்களா என்பது தான் தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ள மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

கூட்டு ஊழல்
தமிழகத்தில் ஊழலை பொறுத்தவரை திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் யாரையும் யாரும் சளைத்ததல்ல என்றும் திமுக குடும்ப ஊழல் என்றால் அதிமுக கூட்டு ஊழல் என விமர்சித்துள்ளார். இதேபோல் சாதிவாரியான இட ஒதுக்கீடு என்பது நடக்காத ஒரு விஷயம் என குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பாஜக வளர்ச்சி
தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் பாஜக மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்றும் பாஜகவின் தேவை தமிழகத்திற்கு அவசியம் எனவும் குருமூர்த்தி கூறியுள்ளார். இதனிடையே சசிகலா குறித்த ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு அமமுகவினருக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications