சட்டசபைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு

சட்டசபைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் உரிமைக்குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 18 திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் உரிமைக்குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 18 திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு சட்டசபைக்குள் குட்கா கொண்டு வந்ததாக பேரவை உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாக கூறி அதை ரத்து செய்தது.

Gutka in Tamil Nadu Assembly: Madras High Court verdict DMK MLAs plea on Feb 10

நோட்டீஸில் அடிப்படை தவறுகள் உள்ளதாக கூறி அதை தலைமை நீதிபதி அமர்வு ரத்து செய்தது. தவறுகளை களைந்து புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

உரிமைக்குழு கூடி 2வது முறையாக அனுப்பிய நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உட்பட 18 திமுக எம்.எல்.ஏ.க்களும் வழக்கு தொடர்ந்தனர். வழக்குகளை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து பேரவைச் செயலாளர், உரிமைக்குழு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா நாளை தீர்ப்பளிக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+