பாருங்க.. அண்ணாமலை இல்லாத நேரம்! பாஜகவில் ஆளாளுக்கு அடிச்சு ஆடுறாங்களே! சல்லி சல்லியா நொறுங்கிடுச்சே
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில், தமிழக பாஜகவில் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து அடித்து ஆட தொடங்கி உள்ளனர். கட்சிக்குள் அதிரடியாக நிர்வாகிகள் வேகம் காட்டி வருகின்றனர்.
பாஜகவில் உறுப்பினர்கள் புதுப்பிப்பு, புதியவர்கள் சேர்ப்பு ஆகிய பணிகளை செப்டம்பர் 1-ந்தேதி தொடங்கியது. புதுப்பிப்பதில் முதல் நபராக பிரதமர் மோடி தனது உறுப்பினரை புதுப்பிக்கிறார். அவரது உறுப்பினர் அட்டை புதுப்பிக்கப்பட்டதும் தமிழக பாஜகவில் தொடங்கி உள்ளது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் கல்வியை கற்பதற்காக லண்டன் சென்றுள்ள அண்ணாமலை, தமிழக பாஜக நிர்வாகிகளிடம், உறுப்பினர் சேர்க்கையில் சீரியஸாக இருக்க வேண்டும் ; 1 கோடி உறுப்பினர்கள் நம் இலக்கு ; ஏற்கனவே நம்மிடம் 50 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 50 லட்சம் பேரை புதிதாக சேர்க்க வேண்டும்.
1 கோடி இலக்கை அடைந்துவிட்டால் 2026 தேர்தலில் நாம் நினைப்பது சாத்தியமாகும் என்று நம்பிக்கையாக பேசியிருக்கிறார் அண்ணாமலை. இதற்கிடையே, அண்ணாமலை லண்டனுக்கு செல்வது செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர் தற்போது முன்னதாகவே லண்டன் கிளம்பிச் சென்றிருப்பது ஏன்? என்கிற கேள்வி தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகிகளிடம் எதிரொலிக்கச் செய்துகொண்டிருக்கிறது.
குழு அமைப்பு: இப்படிப்பட்ட நிலையில்தான், பாஜகவில் அரசியல் பணிகளை கவனிப்பதற்காக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் கமிட்டி சமீபத்தில் அமைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்திருந்தார்.
அண்ணாமலை இல்லாத சூழலில், கட்சியை வழிநடத்த செயல் தலைவர் அல்லது தற்காலிகத் தலைவர் ஒருவரை நியமிப்பது குறித்து தேசியத் தலைமை ஆலோசித்திருந்தது. இதனை அறிந்து, அப்பதவியை கைப்பற்ற தமிழிசை, வானதி, குஷ்பு உள்ளிட்ட பெண் பிரபலங்களும், பொன் ராதாகிருஷ்ணன், நயினார், எஸ்.ஆர்.சேகர், கே.டி.ராகவன் உள்ளிட்ட சீனியர்களும் கடும் முயற்சி செய்தனர்.
எச். ராஜா உள்ளே வந்தது எப்படி?: தங்களுக்கு அந்த பதவி வேண்டும் அல்லது இவருக்கு அந்த பதவி கிடைக்கக் கூடாது என்கிற ரீதியில், இவர்கள் காய்களை நகர்த்தியிருந்தனர். இதற்காக டெல்லியில் தங்களின் லாபியை பயன்படுத்தினர். போட்டிகளும் பிரச்சனைகளும் இருந்ததால், இவர்களில் யாரை நியமித்தாலும் அதிர்ப்தி வெடிக்கும் என்பதை உணர்ந்ததால், செயல் தலைவர் கான்செப்ட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு 'ஒருங்கிணைப்பு குழு' ஒன்றை அமைத்து, உறுப்பினர் சேர்க்கை பணிகளை முன்னெடுக்கச் சொல்லலாம் என முடிவு செய்து அதன்படி குழுவை அமைத்தனர். தலைவர் பதவி ரேசில் இருக்கும் யாரையும் கமிட்டியில் போடாமல் ஹெச்.ராஜா தலைமையில் கமிட்டியை உருவாக்கினர். இதன் மூலம் கான்ட்ராவெர்சியை தவிர்க்கலாம் என்கிற யோசனையில் இந்த கமிட்டியை அமைத்தனர் என்று சுட்டிக்காட்டுகிறது தமிழக பாஜக.
இந்த நிலையில், தற்காலிகமாக இருந்தாலும், கமிட்டி கலைக்கப்படுவது வரை கன்வீனர் நாம் தான் யோசித்து, அண்ணாமலையைத் தாண்டி அரசியல் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டாராம் ஹெச்.ராஜா. அதன் ஒரு கட்டமாகத்தான், கவர்னர் ரவியை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தியது, பிரதமரின் அப்பாயிண்ட்மென்ட் பெற்று அவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றது போன்ற நடவடிக்கைகள் என்கிறது ஹெச்.ராஜாவின் ஆதரவு வட்டம்.
இலக்கு என்ன?: இது குறித்து அவரது ஆதராவளர்களிடம் விசாரித்தபோது, "தேசிய அளவில், பத்து கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக பாஜகவை கொண்டு வர வேண்டும் என இலக்கு வைத்துள்ளோம். தமிழகத்தில் பாஜகவுக்கு 1 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள்ங்கிற நிலையை உருவாக்குங்கள். தமிழகத்தில் பாஜகவுக்கு தலைவர் இல்லைங்கிற தோற்றம் வாராத அளவுக்கு கட்சி பணிகளை கவனியுங்கள்னு ராஜாவை பிரதமர் வாழ்த்தினார் " என்று மோடியை ராஜா சந்தித்த விபரங்களை கூறுகிறார்கள்.
அண்ணாமலை இருந்தவரை எச். ராஜா பெரிதாக எதுவும் பேட்டிகள் கொடுக்கவில்லை. சர்ச்சையாக பேசவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான், எச். ராஜா இப்போது பேசி உள்ளார். அதோடு சமீபத்தில் ஆளுநர் ஆர். என் ரவியை கூட எச். ராஜா சந்தித்தார். அண்ணாமலை இல்லாத நேரத்தில் இந்த சந்திப்பும் கூட கவனம் பெற்றது.
இன்னொரு சந்திப்பு: இப்படி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை படிப்பதற்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில் கட்சியை தமிழ்நாட்டில் ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக செயல்பட்டு வரும் எச் ராஜா டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பு நடத்தி உள்ளார். தமிழ்நாடு அரசியல் நிலவரங்கள், தமிழ்நாடு பாஜகவில் நிலவும் அரசியல் ரீதியான பிரச்சனைகள், கட்சியின் நிலைமை, அரசியல் ரீதியாக கட்சிக்குள் மோதல்கள் குறித்து அவர் பேசியதாக கூறப்படுகிறது.
அதோடு தமிழ்நாடு உள்துறை நிலவரம்.. அதாவது சட்ட ஒழுங்கு குறித்தும் எச். ராஜா புகார்களை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது எச். ராஜா மேற்கொண்டு உள்ள இந்த நடவடிக்கை பாஜக வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. அவர் எடுத்து வைக்கும் சில அடிகள் கட்சிக்கு உள்ளேயே விவாதங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
எச். ராஜா அடித்து ஆட.. தமிழிசை அதிரடி மூவ்: இப்படி எச். ராஜா அடித்து ஆட.. கிடைத்த கேப்பில் தமிழிசை சௌந்தர்ராஜனும் ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தொடர்பான சில முக்கிய மெசேஜ்களை டெல்லிக்கு அனுப்ப அவர் முடிவு செய்துள்ளார் என்கிறார்கள். இது தொடர்பாக அவர் பேசி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
அண்ணாமலை பெயரும் பாஜக வேட்பாளர் பட்டியலில் இருக்கு.. மையக்குழு கூட்டத்துக்கு பின் உறுதி செய்த நயினார்! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
நாடியே அடங்கிடுச்சே.. அதிமுக கூட போட்ட டீலா? அண்ணாமலை எங்கே? நயினாரிடம் நறுக்கென்று கேட்ட பியூஸ்! -
பியூஸ் கோயல் சொன்ன வார்த்தை.. இறங்கி வந்த அண்ணாமலை.. பாஜக வேட்பாளராக சம்மதம்? என்ன நடந்தது? -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
தமன்னா வருவாங்களா சார்? சுந்தர்.சி களமிறக்க போகும் நட்சத்திர குரூப்! குஷ்பூவால் அடிக்கும் அதிர்ஷ்டம்












Click it and Unblock the Notifications