சர்க்கரை அட்டைதாரர்களுக்கு குஷி! தீபாவளிக்கு ரேஷன் வாங்கியாச்சா? ஞாயிற்றுக்கிழமை கடை இருக்கா? ஹேப்பி
சென்னை: தீபாவளிப் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் மகிழ்ச்சி அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் தவறாமல் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி அரிசி, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு மலிவு விலையிலும், இலவசமாகவும் வழங்கப்படுகின்றன..

பாமாயில் ஒரு பாக்கெட் ரூ.25க்கும், துவரம் பருப்பு ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது... இதனால் கோடிக்கணக்கான மக்கள் பலடைந்து வருகிறார்கள்.
பாமாயில்: கடந்த சில மாதங்களாகவே ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு உள்பட சில பொருட்கள் தட்டுப்பாடு நிலவி வருவதாக புகார்கள் எழுந்த நிலையில், இந்த குறைகளையும் தமிழக அரசு போக்கியிருக்கிறது.. அத்துடன், கூடுதல் தினங்கள் அறிவிக்கப்பட்டு ஒவ்வோரு மாதமும் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தற்போது பண்டிகை காலம் துவங்கிவிட்ட நிலையில், இருப்புகளை ரேஷன் கடைகளில் அதிகப்படுத்தி தயாராக வைத்திருக்கும்வண்ணம், நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், தீபாவளியையொட்டி குறைந்த விலையில் 15 மளிகை பொருட்களை மக்களுக்கு கொடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ரூ 499 -க்கு மளிகை பொருள் தொகுப்பானது, அமுதம் பிளஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அமுதம் பிளஸ்: இந்த தொகுப்பில் மொத்தம் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்பதை பார்க்கலாம், கடுகு+ உளுத்தம் பருப்பு- 125 கிராம் சீரகம்- 100 கிராம் வெந்தயம்- 100 கிராம் சோம்பு- 50 கிராம் மிளகு- 50 கிராம் மிளகாய்- 250 கிராம் தனியா- 500 கிராம் மஞ்சள் தூள் 50 கிராம் புளி- 500 கிராம் உப்பு- 1 கிலோ உளுத்தம் பருப்பு - 500 கிராம் கடலை பருப்பு- 200 கிராம் பாசிப்பருப்பு- 200 கிராம் வறுகடலை- 200 கிராம் பெருங்காயத்தூள்- 15 கிராம் என மொத்தம் 3.840 கிராம் கொண்ட பொருட்கள் ரூ 499 க்கு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு மற்றொரு சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இதுதொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் உள்ளதாவது:
முன்னேற்பாடுகள்: "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுரையின்படி, பொதுமக்கள் அனைவரும் தீபாவளிப் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழகத்தில் அனைத்து துறைகளின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, கூட்டுறவுத்துறையின் மூலம் தமிழகம் முழுவரும் செயல்படும் 24,610 முழு நேர நியாயவிலைக்கடைகள், 10,164 பகுதி நேர நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 34,774 நியாயவிலைக்கடைகளில் குடிமைப் பொருட்களைப் பெற்று தீபாவளிப் பண்டிகையினை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து முழுநேர மற்றும் பகுதி நேர நியாயவிலைக் கடைகளும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (அக்.27) அன்று முழுவதுமாக வழக்கம்போல் செயல்படும்" என்று பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி: அத்தியாவசிய பொருட்களைப் பெற்று வருகின்ற தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அரசு சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications