அரியலூர் டூ நீலகிரி.. கரைவெட்டி பறவை + லாங்வுட் சோலை காடு.. தமிழ்நாட்டிலேயே டாப் "சம்பவம்".. சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் மற்றும் நீலகிரி மாவட்டம் லாங்வுட் சோலை காடுகள் ஆகிய இடங்களும் சர்வதேச ராம்சார் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.

நீர் நிலைகளை பாதுகாப்பதற்காக, 1971ல் ஈரான் நாட்டில் ராம்சார் நகரில் சர்வதேசஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சதுப்பு நிலங்கள், நீர் நிலைகள் அலையாத்தி காடுகள் சர்வதேச அளவில் பட்டியலிடப்படுகின்றன. ராம்சார் பட்டியலில் இடம் பெறும் இடங்களும் சர்வதேச அளவில் பட்டியலிடப்படுகின்றன.

 Happy announcement from Ariyalur, Nilgiris districts and longwood oasis karaivetti sanctuary got ramsar certificate

வருடந்தோறும் பிப்ரவரி 2ம் தேதி சர்வதேச ஈர நிலங்கள் தினமாக கடைபிடிக்கப்படும் நிலையில், ஒவ்வொரு முறையும் ராம்சார் பட்டியலில் இடம்பெறும் இடங்களும் சர்வதேச அளவில் கவனத்தை பெற்று வருகின்றன.. அப்படித்தான், தற்போது அரியலூர், நீலகிரி இரு மாவட்டங்களும் கவனத்தை பெற்றுள்ளன.

சபாஷ் : இதுகுறித்து தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் உள்ளதாவது:

"தமிழகத்தில் இதுவரை, 14 இடங்கள் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் இந்த ஆண்டுக்கான கணக்கில் கூடுதலாக, இரண்டு இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அரியலுார் மாவட்டத்தில், 1,121 ஏக்கர்பரப்பளவில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது..

சதுப்பு நிலங்கள்: சதுப்பு நிலமாக உள்ள இப்பகுதி கிராம மக்களால் பாதுகாக்கப்படும் நிலையில் இங்கு, 198 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. நீலகிரி மாவட்டத்தில், 286 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள லாங்வுட் சோலை காடுகள், ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. வெப்ப மண்டல மழைக்காடாக வகைபடுத்தப்பட்டுள்ளது. வெப்ப மண்டல மழைக்காடாக வகைப்படுத்தப்பட்டுள்ள இப்பகுதிக்கு, 14 வகையான பறவைகள் வந்து செல்கின்றன.

இவற்றுடன் சேர்த்து தமிழகத்தில் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை, 16 ஆக அதிகரித்துள்ளன. இதனால், ராம்சார் பட்டியலில் இடம் பெற்ற பகுதிகள் அதிகம் உள்ள முதல் மாநிலம் எந்த பெருமையை தமிழகம் பெற்றுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது..

வனத்துறை : ராம்சர் தலங்களை பொறுத்தவரை, இந்தியாவில் மொத்தம் 75 ராம்சர் தலங்கள் உள்ளன. இவற்றில் தமிழகத்தில் மட்டுமே 14 தலங்கள் உள்ளன. இதைத்தவிர, மேலும் 7 சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் பெற தமிழ்நாடு ஈரநில ஆணையம் திட்டமிட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள லாங்வுட் சோலைக்கு ராம்சர் அங்கீகாரம் பெறுவதற்கான பணிகளை வனத்துறை மேற்கொண்டு வந்தநிலையில், லாங்வுட் சோலைக்கு ராம்சர் அங்கீகாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது, இயற்கை ஆர்வலர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. நம்முடைய நாட்டிலேயே அதிகமாக 16 ராம்சர் தலங்களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நாம் தொடர்ந்து செலுத்தி வரும் அக்கறைக்கான சான்றாக இந்த சாதனை விளங்குகிறது என்று பூரித்து சொல்கிறார்கள்.

பெரும் மகிழ்ச்சி: அதுமட்டுமல்ல, கோத்தகிரி நகரில், கிட்டத்தட்ட 250 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள லாங்வுட் சோலைக்கு, ஏற்கனவே கடந்த 2022-ல் இங்கிலாந்து அரசியின் பசுமை நிழற்குடை (குயின்ஸ் கனோபி) விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+