முதல் முறையாக.. தமிழ்நாட்டில் முழுக்க முழுக்க "100 % கோதுமை பீர்".. 1 பீர் விலையை பாருங்க.. ஹேப்பி
சென்னை: முதல் முறையாக, முழுக்க கோதுமையில் தயாரிக்கப்பட்ட பீர் உள்ளிட்ட ஐந்து வகை புதிய பீர்களை விற்க, 'டாஸ்மாக்' நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, மதுவிலக்கு என்பது கனவாகவே போய் கொண்டிருக்கும் நிலையில், இன்னொருபுறம், டாஸ்மாக்குகள் மூலம் கிடைக்கும் வருவாய் அரசுக்கு ஓவராக கொட்டிக் கொண்டிருக்கிறது.. மொத்த நிதி ஆதாரத்தில் 3ல் ஒரு பங்கு வருமானம், டாஸ்மாக், மதுக்கடைகள் மூலம் கிடைத்து வருகிறது.

மதுக்கடைகள்: அந்தவகையில், மாநிலத்தில் மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.. இதன்மூலம் வருடத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை தினங்களில் அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனையாகின்றன.
அதேபோல, அரசின் நிதிச்சுமையை குறைப்பதற்காகவும், வருவாயை பெருக்குவதற்காகவும், டாஸ்மாக் மதுபானங்கள் விலைகளும் சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ளதால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு, 2,400 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதற்கு நடுவில் பண்டிகைகள், சிறப்பு நாட்களில் டாஸ்மாக் வருமானம் இரட்டிப்பாகிறது.
ஜில் பீர்: இப்படிப்பட்ட சூழலில், குடிமகன்களுக்கு இன்னொரு மகிழ்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.. தற்போது கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில், பீர் விற்பனை அதிகரித்துள்ளது.. அதனால், மதுக்கடைகளுக்கு ஏராளமான ஜில் பீர்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தினமும், 60,000 பெட்டிகளாக இருந்த பீர் விற்பனையானது, இப்போது சுட்டெரிக்கும் வெயில் காரணமாக, 1 லட்சம் பெட்டிகளை தாண்டி கொண்டிருக்கிறது.
இப்போது மதுக் கடைகளில் கிட்டத்தட்ட 35 பீர் வகைகள் விற்கப்படுகின்றன... எனினும், புதிய வகை மதுபானங்களை விற்குமாறு, டாஸ்மாக்கிற்கு கோரிக்கைகள் வலுத்து வருகின்றன..
அதனால்தான், 100 சதவீதம் கோதுமையில் தயாரிக்கப்பட்ட, "100% வீட் பீர்" என்ற பெயரில் புதிய பீர் அறிமுகம் செய்ய போகிறார்களாம். இந்த வீட் பீர் விலை 190 ரூபாய், காப்டர் வகை பீர்கள் 160 ரூபாய் - 170 ரூபாய் விலையில் கிடைக்க போகிறதாம். 5 வகை புதிய பீர்களை விற்க, டாஸ்மாக் நிர்வாகமும் ஒப்புதல் அளித்துள்ளது.
தட்டுப்பாடு: இதுகுறித்து, அதிகாரி சொல்லும்போது, "'டிராபிக்கல்' என்ற நிறுவனத்திடமிருந்து பீர் வாங்கப்படுகிறது.. இந்த நிறுவனத்தின் ஆலையில், இன்னொரு நிறுவனமும் பீர் உற்பத்தி செய்கிறது. அதனால், தட்டுப்பாடு இல்லாமல் கடைகளுக்கு, அனைத்து வகை பீர்களும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன... இப்போதைக்கு கையிருப்பில், 10 லட்சம் பெட்டி பீர் வகைகள் இருந்தாலும், புதிய வகை பீர்கள் விரைவில் கடைகளில் கிடைக்கும்" என்றனர்.
இதனிடையே, பிரபல பிராண்ட் ஆன "காப்டர்" தயாரிப்பில், "செலக்ட் சூப்பர் ஸ்ட்ராங், செலக்ட் ஸ்ட்ராங், பிரீமியம் ஸ்ட்ராங், பிரீமியம் ஸ்மூத் லெஹர் பீர்" வகைகளை விற்பதற்கு, டாஸ்மாக் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாம்.. அதுமட்டுமல்ல, தற்போது கோடை வெயில் என்பதால், அடுத்த சில நாட்களிலேயே இதற்கான விற்பனைகள் வந்துவிடும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications