அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி.. டிசம்பர் 2வது வாரத்திலேயே போக்குவரத்து ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை.. செம
சென்னை: போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தம் குறித்த இரண்டாம் கட்ட பேச்சு, அடுத்த மாதம், 2வது வாரத்தில் நடத்தப்படும் என்று போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். அத்துடன், அரசின் பண உதவியை பெற்று அகவிலைப்படி உயர்வு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அரசு போக்குவரத்து கழகங்களில், 1.43 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள்.. அவர்களுக்கான, 14வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது.. இதையடுத்து, பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, ஊதிய ஒப்பந்தத்துக்கான முதல் கட்ட முத்தரப்பு பேச்சு, சென்னையில் கடந்த ஜூலை 27ம் தேதி நடந்தது.

பேச்சுவார்த்தை: முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்து 4 மாதங்களாகி விட்ட நிலையில், தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடராஜன், ஆறுமுகநயினார் உள்ளிட்ட நிர்வாகிகள், சென்னை, தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறைச்செயலர் பணீந்திர ரெட்டியை நேற்றைய தினம் சந்தித்தனர்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு முழுமையாக ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும். டிரைவர்-கண்டக்டர் (D & C) என நியமிக்காமல், 2 பணிகளுக்கும் தனித்தனியே ஊழ ஊழியர்களை நியமிக்க வேண்டும். தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்குவதை கைவிட வேண்டும். வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றது,
கோரிக்கைகள்: அப்போது, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை டிசம்பர் 2-வது வாரத்துக்குள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும், ஓய்வு கால பணப்பலன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை செயலாளர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
மேலும் அரசின் பண உதவியை பெற்று அகவிலைப்படி உயர்வு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும், வரவு-செலவுக்கு இடையேயான வித்தியாசத் தொகை தொடர்பான கோப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் சங்க நிர்வாகிகளிடம் போக்குவரத்துத்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார்.
நம்பிக்கை: புதிய ஊதிய ஒப்பந்த பேச்சு, அடுத்த மாதம் 2வது வாரத்துக்குள் நடத்த ஏற்பாடு செய்யப்படுவதுடன், ஓய்வு கால பணப்பலன், அகவிலைப்படி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பணீந்திர ரெட்டி உறுதி அளித்துள்ளது, போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் பெற்று வருகிறது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications