Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாணவர்களுக்கு ஹேப்பி.. அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது தெரியுமா? பள்ளிக்கல்வித் துறை அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களவை தேர்தலை முன்னிட்டு பள்ளிகளில் 4 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், பிளஸ் 2, பிளஸ் 1, மற்றும் 10ம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 1 முதல் ஏப்ரல் 8 வரை நடந்து முடிந்தது.. இதைத்தொடா்ந்து 1 முதல் 9-ம் வகுப்பு மாணவா்களுக்கான முழு ஆண்டு மற்றும் பருவத் தோ்வுகள் ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

Happy news for Tamil Nadu Government School Students and announced summer vacation extended holidays april 21

விடுமுறை: இதில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையான குழந்தைகளுக்கு ஏப்ரல் 5-ஆம் தேதியுடன் தோ்வுகள் முடிவு பெற்றுவிட்டன. அவா்களுக்கு ஏப்ரல் 6 ம்தேதி வரை முதல் கோடை விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ரமலான் பண்டிகை காரணமாக 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத் தோ்வுகள் ஏப்ரல் 22, 23-ம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

ஒத்திவைப்பு: எனவே, வெள்ளிக்கிழமையுடன் முடிவடையவிருந்த முழு ஆண்டுத்தோ்வுகள், இதன்காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், தோ்தலை முன்னிட்டு பெரும்பாலான பள்ளிகள் தோ்தல் முகாம்களாக மாற்றப்படவிருக்கின்றன.. அதுமட்டுமல்லாமல், ஆசிரியா்களும் தோ்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள்.. இதையடுத்து 4 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சனிக்கிழமை முதல் ஏப்ரல் 21 வரை தொடா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாணவா்கள் ஏப்ரல் 22, 23-ஆம் தேதிகளில் பள்ளிக்கு மறுபடியும் தோ்வெழுத வந்தாக வேண்டும்... அதற்கு பிறகு கோடை விடுமுறை வழங்கப்படவுள்ளது. தோ்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியான பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்பதால் இந்த முறை மாணவா்களுக்கு 2 மாதங்கள் வரை கோடை விடுமுறை கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

அறிவிப்பு: அதேநேரம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இறுதி வேலை நாளான ஏப்ரல் 26-ம் தேதி வரை அரசு விடுமுறை இல்லாத தினங்களில் பள்ளிக்கு வருகை புரிவது அவசியம் என்றும், பள்ளி வேலை நாட்களில் மாணவர் சேர்க்கை, விடைத்தாள் மதிப்பீடு மற்றும் இதர அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தலைமையாசிரியர்கள் சொல்லும்போது, "22, 23 ஆகிய தேதிகளில் நடக்கும் தேர்வை, கட்டாயம் எழுத வேண்டும் என, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேர்வு முடிந்து, 24ம் தேதி முதல், 4 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும். ஆசிரியர்கள், 26ம் தேதி வரை பள்ளிக்கு வர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+