தமிழக போலீசாருக்கு வார விடுமுறை.. டிஜிபி சூப்பர் உத்தரவு.. யாருக்கெல்லாம் பொருந்தும்!
சென்னை: தமிழகத்தில் போலீஸ்கார்களுக்கு வாரம் ஒரு நாள் சுழற்சி முறையில் விடுமுறை அளிக்கும் படி சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்குமார் தாஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு போலீசாரிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விடுமுறைகள் இல்லாமல் பணியாற்றி வரும் போலீசார், பணிச்சுமை காரணமாக கடும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக கடைநிலை அதிகாரிகள், காவலர்கள் இடையே மன அழுத்தம் அதிகமாக உள்ளது. அவர்களின் குறைகளுக்கு உரிய தீர்வுகள் இதுவரை காணப்படவில்லை.
மனஅழுத்தம் அதிகரித்து போலீசார் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. அத்துடன் பணிச்சுமையால் கடுமையாக நடந்து கொள்ளும் சம்பவங்களும் ஆங்காங்கே நடக்கிறது. நோய் உள்ளிட்ட காரணங்களால் மரணம் அடைவதும் அதிகரித்துள்ளது., நோயினால் இறப்பது அதிகரித்துள்ளது.

எவ்வளவு பேர் மரணம்
இந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கி நவம்பா் 15-ஆம் தேதி வரை காவல்துறையைச் சோ்ந்த 285 போ் மரணம் அடைந்துள்ளனர். இதில் 43 போ் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 40 போ் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். 90 போ் உடல்நலக்குறைவினாலும், 46 போ் மாரடைப்பினாலும், 56 போ் சாலை விபத்தினாலும், 7 போ் புற்று நோயினாலும் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த காலங்களை விட அதிகம் என சொல்லப்படுகிறது.

பணிச்சுமை அதிகம்
மற்ற அரசு வேலைகளைப் போல் போலீஸ் வேலைக்கு நேரம் காலம் இல்லை. போலீசார் விடுமுறை இல்லாமைல் 24 மணி நேரமும் வேலை செய்கிறார்கள். பலர் 12 மணி நேரம் வரை பணியில் இருக்கும் நிலை உள்ளது. இதனால் எளிதில் நோய்வாய்ப்படுகின்றனா். பணிச்சுமையின் காரணமாக மன அழுத்ததிலும் சிக்கித் தவிக்கிறார்கள். குறிப்பாக போலீஸ் ஸ்டேசன்களில் பணிபுரியும் போலீஸாருக்கு பணிச்சுமை பல மடங்கு அதிகமாக உள்ளது.

போலீசார் கோரிக்கை
எனவே போலீஸ் ஸ்டேசன்களில் பணியாற்றும் போலீசாருக்கு காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலா்களுக்கு சுழற்சி முறையில் வார விடுமுறை வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் வார விடுமுறை வழங்குவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததால் போலீசாருக்கு வார விடுமுறை அளிக்கப்படவில்லை.

போலீசாருக்கு உத்தரவு
இந்நிலையில் தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்குமார் தாஸ் தமிழகம் உள்ள அனைத்து மாநகர காவல் ஆணையா்கள் (சென்னை தவிர்த்து), மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், ஆகியோருக்கு அண்மையில் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மகிழ்ச்சி அறிவிப்பு
இதன்படி போலீஸ் ஸ்டேசன்களில் பணிபுரியும் போலீசாருக்க சுழற்சி முறையில் வார விடுமுறை வழங்கும்படியும், அதை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், சரக டிஐஜிக்கள் கண்காணிக்கும்படியும் உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவு போலீசார் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவு எப்போது அமலுக்கு வரும் என போலீசார் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications