திருநெல்வேலிக்கு ஹேப்பி.. சென்னைக்கு குஷி.. 12, 19, 26, 3, 10, 17, 24, 31 தேதி பாருங்க நெல்லை மக்களே
சென்னை: திருநெல்வேலிக்கு மகிழ்ச்சியை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.. இந்த அறிவிப்பானது, பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்டது.. பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கும், கோடைவாசஸ்தலங்களுக்கும் பயணிக்க தொடங்கியுள்ளனர். இதற்காகவே 3 மாதங்களுக்கு முன்பேயே, ரயில்களில் டிக்கெட்களை ரிசர்வ் செய்து, பொதுமக்கள் பயணித்து வருகிறார்கள்..

ரிசர்வேஷன்: ஆனால், மேலும் பலருக்கும் ரயில்களில் டிக்கெட் கிடைக்காத நிலைமை உள்ளது.. எனவே, ரயிலில் நெரிசலுடன் பயணம் செய்யும் நிலைமைக்கு ஆளாகி வருகிறார்கள்.
இதுதவிர, முக்கிய வழித்தடங்களில் நாள்தோறும் இயக்கப்படும் ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், மக்களவை தேர்தல் காரணமாகவும் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர்... வாக்குப்பதிவு நேரத்திலும் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது
தென்னக ரயில்வே: எனவே, இதையெல்லாம் கருத்தில்கொண்டே கோடை கால கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாகவும், பயணிகள் வசதிக்காகவும், தென்னக ரயில்வே ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து திருநெல்வேலி, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்குரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு இதுதான்:
"திருநெல்வேலியில் இருந்து ஏப்.11, 18, 25, மே 2, 9, 16, 30 ஆகியதேதிகளில் மாலை 6.45 மணிக்கு சிறப்பு ரயில் (06070) புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
திருநெல்வேலி: சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 12, 19, 26, மே 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு ரயில் (06069) புறப்பட்டு, மறுநாள் காலை 7.10 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகியநிலையங்களில் நின்று செல்லும்.
முன்பதிவு தொடக்கம்: சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்.10, 17, 24 ஆகிய தேதிகளில் (புதன்கிழமைகளில்) பிற்பகல் 3.45 மணிக்கு சிறப்பு ரயில் (06043) புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு கொச்சுவேலியை அடையும். மறுமார்க்கமாக, கொச்சுவேலியில் இருந்து ஏப்.11, 18, 25ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமைகளில்) மாலை 6.25 மணிக்குசிறப்பு ரயில் ( 06044) புறப்பட்டு, மறுநாள் காலை 10.40 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், செங்கானூர், கொல்லம் ஆகிய நிலையங்களில் நின்றுசெல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications