மஞ்ச தாலியின் ஈரம்கூட காயல.. காலையில் தாசில்தாருக்கு திருமணம், மாலையில் இந்த கொடுமை.. சிக்கிய 2 பேர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆந்திராவையே உலுக்கி எடுத்துள்ள சூர்யபிரகாஷ் கொலை வழக்கில் 2 பேர் கைதாகி உள்ளனர்.. கைதானவர்களிடம் விசாரணை நடக்கிறது.. சமூகத்தில் நிலவும் சாதிய மற்றும் மதக் கட்டமைப்புக்கள், தனிமனித சுதந்திரத்தை விட, குடும்ப கௌரவமே முக்கியம் என்ற பிற்போக்குத்தனமான சிந்தனையால் நடக்கும் ஆணவ கொலைகள் இன்றும் நடப்பது அதிர்ச்சியை தந்து வருகிறது.. அப்படித்தான் இந்த கொலையையும் பார்க்க வேண்டி உள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள துவாரபுடி பகுதியில் வசித்து வந்தவர் சூரிய பிரகாஷ்.. 41 வயதான இவர் அப்பகுதியில் துணி வியாபாரம் செய்து வந்தார்..

Deputy Tahsildar Husband Andhra Pradesh

அதே பகுதியை சேர்ந்த சந்தியா என்ற பெண், கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டல வருவாய் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வந்தார்.. சூரிய பிரகாஷ் மற்றும் சந்தியா இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் என்பதால், அந்த காலத்திலிருந்தே இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது.. அந்த நட்பு பின்னர் காதலாக மாறியது..

துணைதாசில்தார்

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு சந்தியாவின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.. இதனால், குடும்பத்தின் எதிர்ப்பை மீறி இருவரும் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.. அதன் பிறகு, நேற்று முன்தினம் ஒரு கோவிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர்..

இந்த திருமணத்தில் அவர்களின் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.. திருமணம் நடந்த தகவல் பின்னர் சந்தியாவின் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது..

இந்த தகவலை அறிந்ததும் சந்தியாவின் குடும்பத்தினர் கடும் கோபமடைந்தனர்.. திருமணத்திற்கு பிறகு, சந்தியாவை தனது வீட்டிற்கு சூரிய பிரகாஷ் அழைத்து சென்றார்.. அன்றைய தினம் இருவருக்கும் முதலிரவு தயாராகி கொண்டிருந்தது.. அப்போது, நள்ளிரவு நேரத்தில் சந்தியாவின் சகோதரர்கள் சந்திரபால் மற்றும் கிரிபாபு ஆகியோர் அங்கு வந்தனர்..

என் தங்கச்சியை நீ எப்படி கல்யாணம் செய்யலாம்? என்று சூரிய பிரகாஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.. இந்த வாக்குவாதம் சில நிமிடங்களில் ரத்தக்களறியாக மாறியது..

பாறாங்கல்லை தூக்கி போட்டு

அப்போது, சந்திரபால் மற்றும் கிரிபாபு இருவரும் சேர்ந்து சூரிய பிரகாஷை கடுமையாக தாக்கினார்கள். பிறகு கீழே கிடந்த பெரிய பாறாங்கல்லை தூக்கி, மாப்பிள்ளை தலையில் போட்டனர்.. இதில் சூரிய பிரகாஷ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.. இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.. பின்னர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சந்தியாவின் சகோதரர்கள் சந்திரபால் மற்றும் கிரிபாபு ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில், தற்போது கைது செய்துள்ளனர்..

துணி வியாபாரம்

திருமணமான சில மணிநேரங்களிலேயே மணமகன் படுகொலை செய்யப்பட்ட இந்த ஆணவக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தியாவும், சூரியபிரகாஷும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.. இருவரும் பள்ளிக் காலத்திலிருந்தே காதலித்து வந்துள்ளனர்.. ஆனால் சரியான சூரிய பிரகாஷுக்கு அமையவில்லை என தெரிகிறது..

உள்ளூரிலேயே துணி வியாபாரம் செய்து வந்தாராம்.. நிரந்தர வருமானம் இல்லாத நிலையில், மாற்று சாதியை சேர்ந்தவரை எப்படி திருமணம் செய்யலாம் என்று, தங்கையை இரு அண்ணன்களும் எதிர்ப்பு காட்டி உள்ளார்கள்.. இதுவே இந்த ஆணவ கொலைக்கு காரணமாக உள்ளது.. விசாரணையும் நடந்து வருகிறது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+