கோர்ட்டை நாடிய ஹாரிஸ் ஜெயராஜ்.. “சர்ருனு” போகும் இத்தாலி சொகுசு கார்! ரூ.11.5 லட்சம் வரிக்கு எதிர்ப்பு
நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசுக் காரை இறக்குமதி செய்ததற்காக நுழைவு வரியை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தது பெரும் விவாதப் பொருளானது.
சென்னை: இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சொகுசு காருக்கு ரூ.11.50 லட்சம் நுழைவு வரி செலுத்தக் கூறி தமிழ்நாடு அரசு அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி பிரபல இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசுக் காரை இறக்குமதி செய்ததற்காக நுழைவு வரியை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தது பெரும் விவாதப் பொருளானது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விஜய் மீது தெரிவித்த விமர்சனங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. உயர்நீதிமன்றத்தின் விமர்சனங்களை திரும்பப்பெறக்கோரி விஜய் தரப்பு மனுத்தாக்கலும் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தாலி சொகுசு கார்
இந்த நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், மசராட்டி (Maserati Granturismo S Coupe) எனும் இத்தாலி நாட்டு சொகுசு காரை கடந்த 2010 ஆம் ஆண்டு இறக்குமதி செய்து இருக்கிறார். தமிழ்நாட்டில் அதை ஓட்டுவதற்கு அனுமதி கோரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அவர் பதிவு செய்ய விண்ணப்பித்து இருக்கிறார்.

நுழைவு வரி பாக்கி
இந்த நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் இறக்குமதி செய்யப்பட்ட இத்தாலி சொகுசுக் காருக்கு ஹாரிஸ் ஜெயராஜ் நுழைவு வரி செலுத்தவில்லை எனக்கூறி அதை பதிவு செய்ய மறுத்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.13 லட்சம் நுழைவு வரி பாக்கியை வழங்கக்கோரி நோட்டீஸ் அனுப்பியது.

அபராதம்
இதனை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நுழைவு வரியையும், அதற்கான அபராதத்தையும் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இந்த நிலையில், ரூ.11.50 லட்சத்தை செலுத்த வேண்டும் என அவருக்கு தமிழ்நாடு அரசு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் மனுத்தாக்கல் செய்து உள்ளார்.

எதிர்த்து மனு
அந்த மனுவில், "கடந்த 2012 ஜூலை மாதம் விற்கப்பட்ட காருக்கான நுழைவு வரியாக ரூ.11.50 லட்சம் ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டது. மேலும், நுழைவு வரி தொடர்பான வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, சில வழக்குகளில் நுழைவு வரியை மட்டும் செலுத்த உத்தரவிட்டு இருக்கிறார். ஆனால், தற்போது அபராதத்துடன் செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளார்." என்று கூறப்பட்டு உள்ளது.

விரைவில் விசாரணை
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜரானார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications