• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடுராத்திரி ஓடிய செங்கோட்டையன்.. திமுகவில் 8 அதிமுக புள்ளி.. எடப்பாடி பாதிரியாரா.. பகீர் பழனிசாமி

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கும் திமுகவுக்கும் மறைமுக உறவும் டீலும் உள்ளதாக மூத்த தலைவர் கேசி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.

தமிழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.சி. பழனிசாமி மீது, அதிமுக தரப்பில் போலீசில் புகார் தரப்பட்டது..

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் ஆன்லைனில் போலியாக உறுப்பினர் சேர்க்கை செய்து பண மோசடி செய்து வரும் முன்னாள் கேசி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ஏஏ.. மண்டை மேல இருக்கிற கொண்டையை மறந்தாரா எடப்பாடி பழனிசாமி?.. இப்படி ஒன்னு இருக்காமே.. அப்ப போச்சாஏஏ.. மண்டை மேல இருக்கிற கொண்டையை மறந்தாரா எடப்பாடி பழனிசாமி?.. இப்படி ஒன்னு இருக்காமே.. அப்ப போச்சா

 பச்சை பொய்

பச்சை பொய்

இந்நிலையில், தன்மீதான புகார்களை கேசி பழனிசாமி மறுத்துள்ளார்.. ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ள கேசி பழனிசாமி, எடப்பாடி தரப்பினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.. அதன் சுருக்கம்தான் இது: "தலைமைக்கான போட்டி என்பது வேறு, அதிமுகவின் தலைமை யார் என்பது வேறு.. பல பொய்களை என்மீது எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார்.. அதிமுகவில அம்மா காலத்திலேயே என்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக சொல்கிறார்.. அப்படியானால் அதற்கான ஆதாரத்தை என்னிடம் காட்ட சொல்லுங்க.. அம்மா காலத்தில் யார் கட்சியை விட்டு நீக்கினாலும், நமது எம்ஜிஆரில் அறிவிப்பு வெளிவந்திருக்குமே.. அந்த அறிவிப்பை என்னிடம் தர சொல்லுங்க.

 நைஸா பேச்சு

நைஸா பேச்சு

எடப்பாடி பழனிசாமியிடம் நான் மன்னிப்பு கேட்ட பிறகு, என்னை கட்சியில் அவர்கள் சேர்த்து கொண்டார்களாம்.. இதுவும் பச்சை பொய்.. எந்த காலத்தில் இவர்கிட்ட நான் மன்னிப்பு கேட்டேன்? அன்னைக்க கேபி முனுசாமியை வைத்து என்னிடம் நைஸா பேசினாங்க.. வருத்தம் தெரிவித்து ஒரு லெட்டர் வேண்டும் என்று என்னிடம் கேட்டார்கள்.. என்னை கட்சியில் இருந்து நீக்கியதற்கு நீங்கதான் வருத்தம் தெரிவித்து லெட்டர் தரணும்னு நான் சொன்னேன்.. எனக்கு மன்னிப்பு வழங்குவதற்கு எடப்பாடி பழனிசாமி என்ன பாதிரியாரா?

ஜூம் மீட்டிங்

ஜூம் மீட்டிங்

நான் கூட்டம் கூட்டங்களுக்கு என்னை நம்பி கூட்டம் வருகிறதுதானே? அப்படி என்றால் நீ சரியில்லை என்றுதானே அதற்கு அர்த்தம்? நான் ஜூம் மீட்டிங் நடத்தி வருகிறேன்.. 222வது மீட்டிங் நேற்றுடன் நடத்தி முடிந்துள்ளது.. ஒவ்வொரு மீட்டிங்கிலும் 1000 பேர் சமூகவலைதளங்கள் மூலமாக கலந்து கொள்கிறார்கள்.. 2 லட்சத்துக்கும் மேல் அவர்கள் பதிவு செய்துள்ளனர்.. அதில் ஒரு லட்சம் பேர் களத்தில் இறங்கி 6 மாதத்திற்குள் வருகிற மார்ச் மாத காலத்திற்குள் ஆளுக்கு100, 100 உறுப்பினர்களை, அதாவது எடப்பாடியை பிடிக்காத உறுப்பினர்களை ஒருங்கிணைக்கிறோம்.. இந்த ஒரு கோடி பேரையும் ஒன்றிணைத்து, அடுத்த சில மாதங்களில் பொதுச்செயலாளருக்கு தேர்தல் நடத்தி, தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து, இரட்டை இலையும், சின்னமும் எங்களுக்குதான் சொந்தம், தொண்டர்கள்தான் தலைமையை தேர்ந்தெடுக்கணும், பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்பதை வலியுறுத்துவோம்.. இதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.. இதற்கு அமோக ஆதரவும் கிடைத்து வருகிறது. இதை எடப்பாடியால் பொறுத்து கொள்ள முடியவில்லை.

 4800+ ரூபாய்

4800+ ரூபாய்

எம்ஜிஆர் புகழ் பாடுவதோ, அதிமுக தொண்டர்களுக்கு ஆதரவாக பேசுவதோ எப்படி தவறாகும்? அரசியலையும் கடந்து பிற தலைவர்களுடன் இணக்கமாக நடந்து கொள்ள எம்ஜிஆர் எங்களுக்கு கற்று தந்துள்ளார்.. அதன்படி ஒரு திருமண விழாவில் திமுக தரப்பை சந்தித்து பேசியதற்கு ஏஜெண்ட் என்று என்னை கொச்சைப்படுத்தி சொல்வதா? அப்படி பார்த்தால், திமுகவுடன் எடப்பாடி பழனிசாமிதான் மிகவும் நெருக்கமாகி வருகிறார்.. கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் திமுக அரசு எடப்பாடியை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? உங்களுக்கும் திமுகவுக்கும் என்ன டீல்? நெடுஞ்சாலை துறை ஊழல் 4800 கோடி ரூபாய் வழக்கில் ஏன் எடப்பாடியை திமுக அரசு கைது செய்யவில்லை? இப்படி நான் கேட்கலாம்தானே.

செங்கோட்டையன்

செங்கோட்டையன்

அன்னைக்கு அதிமுக அரசுக்கு ஆபத்து என்றதும், ஓபிஎஸ்ஸுடன் சமாதான பேச்சுவார்த்தையை என்னை நடத்த சொல்லி, இந்த அரசாங்கம் கவிழ்வதை காப்பாற்ற வேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்.. அதனால்தான், அன்று இரவு செங்கோட்டையனை நைட் 12 மணிக்கு என்னிடம் அனுப்பி வைத்தார்கள்.. உடனே நானும், செங்கோட்டையனும், ஓபிஎஸ்ஸும், விடிய விடிய 3 மணி வரைக்கும் பேசினோமே.. அன்னைக்கு எடப்பாடி சொல்ல வேண்டியதுதானே, அம்மாவால் நான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவன் என்று?

 8 புள்ளி 8 போஸ்டிங்

8 புள்ளி 8 போஸ்டிங்

எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் எல்லாம் இடைச்செருகல்கள்... இதுபோன்றவர்களுக்கெல்லாம் என்னை போன்ற உண்மையான அதிமுக தொண்டர்கள் பயப்பட மாட்டார்கள்.. ஒரு கோடி அதிமுகவின் தொண்டர்களை இணைத்து, பொதுச்செயலாளரை தேர்ந்தெடுத்து, தேர்தல் ஆணையத்தில் அனுமதி வாங்கபோகிறோம்.. இந்த எடப்பாடி பழனிசாமியால்தான், தங்க தமிழ்செல்வன், செந்தில்பாலாஜி என 8 பேர் திமுகவுக்கு போய்ட்டாங்க.. 8 பேரும் இன்னைக்கு எம்எல்ஏக்களாக உள்ளனர்.. எடப்பாடியால்தான் பல தொண்டர்கள் நொந்து போய் ஒதுங்கிவிட்டார்கள்.. இந்த இயக்கத்தையே அழிக்க வந்தவர் எடப்பாடி பழனிசாமி" என்றார் கொந்தளிப்புடன்.

English summary
Has Sr leader KC Palaniswami negotiated with OPS and whats happening in the AIADMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X