Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோட்டையில் ஓட்டை.. உச்சாணிக்கு உயர்ந்த தினகரன்.. திணறும் எடப்பாடி பழனிசாமி? "சம்பவம்" செய்யும் பாஜக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் முக்குலத்தோர் வாக்கு வங்கியில் விழுந்த ஓட்டைகளை சரிசெய்ய எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வரும்நிலையில், அதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

முக்குலத்தோரின் வாக்குகளை பெறுவதற்காகவே, இந்த 2 வருட காலத்தில், சட்டமன்றம் உட்பட அனைத்து விஷயங்களிலும் தனக்கு அடுத்தபடியான இடத்தை ஆர்பி உதயகுமாருக்கு ஒதுக்கி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

Has TTV Dinakarans influence increased and can AIADMK Edapadi palanisamy re-alliance with BJP

ஆர்பி உதயகுமார் மட்டுமல்லாமல், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா போன்றோருக்கு கட்சியில் தரப்படும் முக்கியத்துவமாகட்டும், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், முனுசாமி போன்றோரை முன்னிலைப்படுத்துவதாகட்டும், சி.விஜயபாஸ்கர், காமராஜ், ஓ.எஸ்.மணியன் போன்றோரை தாங்கி பிடிப்பதாகட்டும், முக்குலத்து வாக்குகளை, அவ்வளவு சுலபத்தில் எடப்பாடியால் பெற முடியாது என்பதைதான் நேற்றைய "தாக்குதல்" நிகழ்வு எடுத்துக்காட்டி உள்ளது.

சசிகலா: மற்றொருபுறம், சசிகலா, தினகரன், ஓபிஎஸ் போன்றோரின் கரங்கள் பலப்பட்டுள்ளதும் நிரூபணமாகி உள்ளது.. தேவர் ஜெயந்தி என்றாலே, வழக்கமாக இவர்கள் 3 பேருக்குமே தென்மண்டலத்தில் ஆதரவும், வரவேற்பும் கூடுவது இயல்பு என்றாலும், இந்த முறை, சிறுவித்தியாசத்தை இவர்களிடம் பார்க்க முடிந்தது என்கிறார்கள்.

சசிகலாவை பொறுத்தவரை, இந்த 2 வருட காலமாகவே, ஒன்றிணைந்த அதிமுகவுக்கு முயன்று கொண்டிருந்தவர்.. வழக்கமாக அதிரடி அரசியலை செய்யும் சசிகலா, சிறைவாசத்துக்கு பிறகு, மென்மைப்போக்கை கையில் எடுத்தார்.. எடப்பாடி பழனிசாமி மீண்டும் மனம் மாறுவார் என்று அளவுக்கு அதிகமாகவே காத்திருந்தும், பல விஷயங்களில், விட்டு கொடுத்தும், கடைசிவரை எடப்பாடியின் மனம் மாறாது என்பதை தாமதமாகத்தான் உணர்ந்து கொண்டுள்ளார்.

ஒழிக ஒழிக: தற்போது, நேரடியாகவே எடப்பாடியை அட்டாக் செய்யும் அரசியலை தற்போது கையில் எடுத்துள்ளார்.. "இரண்டு வருடங்களாக, பசும்பொன்னுக்கு வராத எடப்பாடி பழனிசாமி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தற்போது வருகிறார்" என்று விமர்சித்திருக்கிறார். முதல்முறையாக சசிகலாவின் இந்த பேச்சுதான், எடப்பாடிக்கு எதிரான அரசியலை முன்னிறுத்த துவங்கி உள்ளது. அத்துடன், சுற்றுப்பயணத்தையும் துவங்க போவதாக அறிவித்திருக்கிறார் சசிகலா.

யாரை எதிர்த்து சுற்றுப்பயணம்? யாரை விமர்சித்து சுற்றுப்பயணத்தில் பேசப்போகிறார்? என்ற கலக்கம் எடப்பாடி தரப்புக்கு எழுந்துள்ளதாம்.. இதற்கெல்லாம் பின்னணியில் பாஜக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பாஜக பச்சை சிக்னல் காட்டியிருப்பதால்தான், சசிகலாவின் இந்த எழுச்சி மீண்டும் ஆரம்பமாகியிருப்பதாக அதிமுகவுக்குள் சலசலக்கப்படுகிறது.

தினகரன்: டிடிவி தினகரனை பொறுத்தவரை, பாஜகவுடன் கூட்டணி வைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக சொல்கிறார்கள். அப்படியிருந்தும்கூட, "ஒரு அரசியல்வாதிபோல ஆளுநர் செயல்படுகிறார்" என்ற தினகரன் துணிந்து கூறியிருப்பது, அவருக்கான மவுசை தென்மண்டலங்களில் மேலும் எகிற செய்துவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

காரணம், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்ட எடப்பாடி பழனிசாமி, இந்த நிமிடம்வரை, பிரதமர் மோடியையோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையோ அல்லது பாஜகவின் கொள்கைகளையோ, தமிழகத்துக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களையோ, இதுவரை அதிமுக விமர்சிக்காமலேயே உள்ளார்..

இதுவரை ஆளுநர் குறித்து ஒரு வார்த்தை எதிர்த்து பேசவும் இல்லை, ஆதரித்து பேசவும் இல்லை.. சித்தாந்த ரீதியான மோதலில் கவர்னருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கருத்து சொல்லாததை, திமுக விமர்சித்து கொண்டிருக்கிறது.

ஆளுநர் விவகாரம்: ஆனால், பாஜகவுடன் கூட்டணி வைக்க போவதாக சொல்லப்படும் டிடிவி தினகரன், ஆளுநரை வெளிப்படையாக விமர்சித்திருப்பது தென்மண்டலங்களில் அவருக்கான துணிச்சலாக பார்க்கப்பட்டு வருகிறது. இது வழக்கம்போல், திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை, அமமுகவுக்கு பெற்றுத்தரும் என்றும் நம்பப்படுகிறது.

எனவே, எடப்பாடியை பழனிசாமியை பொறுத்தவரை, நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, சிவகாசி போன்ற தொகுதிகளில், அமமுகவை சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ்ஸைவிட, தினகரனின் அரசியலை முறியடிக்க வேண்டிய நெருக்கடியும் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது.

டிடிவி தினகரன்: அதைவிட முக்கியமாக, ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்ற முக்குலத்தோர் முகங்களை, கட்சியில் இருந்தே தூக்கியெறியப்பட்ட கோபத்தில் உள்ள தென்மண்டல மக்களை சமாதானம் செய்ய வேண்டிய அவசியமும் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, மறவர், கள்ளர், அகமுடையார் என முக்குலத்தின் 3 பிரிவினரும் பெருமளவில் வியாபித்திருக்கும் தென் மாவட்டங்களில் கூடுதல் கவனத்தை செலுத்தி, தென் மாவட்டங்களில் புதிய மாவட்ட செயலாளர்களை நியமிப்பதுடன், கூடுதல் சீட்களை வழங்க வேண்டிய சூழலும் எடப்பாடி பழனிசாமிக்கு வந்துள்ளதாக தெரிகிறது. மொத்தத்தில், அதிமுகவின் கோட்டை "கொங்கு" அல்ல அது முக்குலத்தோரின் தென்மண்டலமும் என்பதை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+