சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தலையில் தொப்பி-முகத்தில் மாஸ்க்.. அடையாளத்தை மறைத்து மாமல்லபுரத்தில் சுற்றிய கூகுள் சுந்தர் பிச்சை!

Google Oneindia Tamil News

சென்னை: கூகுளின் ஆல்பாபெட் சிஇஓவாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை பொறுப்பு வகித்து வருகிறார். இந்தியா வந்த சுந்தர் பிச்சை பிரதமர் மோடி, ஜனாதிபதி திரெளபதி முர்மு ஆகியோரை சந்தித்து பேசியதோடு நன்றி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் தலையில் தொப்பி, கண்களில் கூலிங் கிளாஸ், முகத்தில் மாஸ்க் அணிந்து தனது தோற்றத்தை அடையாளம் தெரியாத வகையில் மாற்றி கொண்ட சுந்தர் பிச்சை தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் பல்லவர் கால சிற்பங்களை ரசித்த படங்கள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.

தமிழகத்தில் பிறந்தவர்கள் இல்லாவிட்டால் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் பல்வேறு தொழில்களில் கொடிகட்டி பறக்கின்றனர். மேலும் பல நாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களில் மிகவும் உயரிய பொறுப்புகளில் செயல்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மிகவும் முக்கியமான நபர் தான் சுந்தர் பிச்சை. கூகுளின் தாய் நிறுவனமான அல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ)வாக தற்போது செயல்பட்டு வருகிறார்.

EXCLUSIVE: சண்டை கூடாது.. அதிமுக தலைவர்கள் பற்றி விமர்சனம் பண்ணாதீங்க! அண்ணாமலை ஆர்டர்.. பரபர காரணம்EXCLUSIVE: சண்டை கூடாது.. அதிமுக தலைவர்கள் பற்றி விமர்சனம் பண்ணாதீங்க! அண்ணாமலை ஆர்டர்.. பரபர காரணம்

தமிழகத்தில் பிறந்தவர்

தமிழகத்தில் பிறந்தவர்

சுந்தர்பிச்சை தமிழகத்தில் பிறந்து பள்ளி படிப்பை முடித்தார். இவர் தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தவர். தந்தை பெயர் ரகுநாத பிச்சை, தாய் பெயர் லட்சுமி. சுந்தர் பிச்சை சென்னையில் பள்ளி படிப்பை முடித்தார். அதன்பிறகு ஐஐடி கோரக்பூரில் பிடெக் படிப்பை முடித்தார். அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழதக்தில் பட்ட மேற்படிப்பை முடித்தார். அங்கு எம்எஸ் மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்க் படிப்பை முடித்தார். பிறகு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் எம்பிஏ முடித்தார்.

பத்மபூஷண் விருது

பத்மபூஷண் விருது

அதன்பிறகு கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கூகுளின் சிஇஓவாக செயல்பட்டு வந்த சுந்தர் பிச்சை தற்போது அதன் தாய் நிறுவனமான அல்பபெட்டின் சிஇஓவாக பணியாற்றி வருகிறார். இவரை பாராட்டும் வகையில் மத்திய அரசு சார்பில் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பத்ம பூஷண் விருதை சுந்தர் பிச்சையிடம் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து வழங்கினார்.

பிரமதர், ஜனாதிபதியுடன் சந்திப்பு

பிரமதர், ஜனாதிபதியுடன் சந்திப்பு

இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு சுந்தர் பிச்சை இந்தியா வந்தார். இந்தியாவில் கூகுள் பிக்சல் போன் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் சுந்தர் பிச்சை வருகை தந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சுந்தர் பிச்சை கடந்த 19ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி திரெளபதி முர்மு ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த வேளையில் பத்ம பூஷண் விருதுக்கான அவர் நன்றி தெரிவித்தார். மேலும் ஜி20 நாடுகள் கூட்டமைப்புக்கான இந்தியாவின் தலைமைத்துவத்தை ஆதரிப்பதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மாமல்லபுரத்தில் சுந்தர் பிச்சை

மாமல்லபுரத்தில் சுந்தர் பிச்சை

இதற்கிடையே தான் தற்போது இணையதளத்தில் சில படங்கள் வெளியாகி உள்ளன. அதில் டீசர்ட் அணிந்திருக்கும் நபர் தலையில் தொப்பி, கண்களில் கண்ணாடி, முகத்தில் மாஸ்க் அணிந்து உலக புகழ்பெற்ற சுற்றுலாதளமான மாமல்லபுரத்தை சுற்றிபார்க்கும் படங்கள் இணையதளங்களில் வெளியாகி வருகின்றன. இது வேறு யாருமில்லை அல்பபெட் நிறுவனத்தின் சிஇஓவான சுந்தர்பிச்சை தான் என கூறப்படுகிறது. தன்னை பார்த்தால் கூட்டம் கூடிவிடும் என்பதற்காக கருப்பு நிறத்தில் தொப்பி, கண்ணாடி, மாஸ்க் அணிந்து அவர் தனது அடையாளத்தை மறைத்து மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால கோவில், சிற்பங்களை ரசித்துள்ளார். இந்த படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

English summary
Google's Alphabet CEO is Sundar Pichai from Tamil Nadu. Sundar Pichai, who came to India, met Prime Minister Modi and President Thirelapathi Murmu and thanked them. In this case, Sundar Pichai, wearing a cap, cooling glasses on his eyes, and a mask on his face, changed his appearance to make it unrecognizable, and the pictures of him enjoying the Pallavar period sculptures in Mamallapuram, Tamil Nadu are spreading rapidly on the internet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X