Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹாட் ட்ரிக்! எடப்பாடிக்கு மீண்டும் குட்நியூஸ் அனுப்பிய டெல்லி! மொத்தமா முடிஞ்சிடுச்சே! அப்போ ஓபிஎஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு மூன்றாவது குட்நியூஸ் ஒன்று சென்றுள்ளது.

அதிமுகவில் தற்போது உட்கட்சி மோதல் தலைவிரித்தாடுகிறது. ஒரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழுவிற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி எப்படியாவது ஒற்றை தலைமையை பிடித்துவிட வேண்டும் என்று முட்டி மோதிக்கொண்டு இருக்கிறார்.

குறுக்க இந்த கவுசிக் வந்தா என்பது போல சிவி சண்முகம் இன்னொரு பக்கம் பாஜகவை அட்டாக் செய்து பேசி உள்ளார். இது போக ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி தனி தனியாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும் நடத்திவிட்டனர்.

இன்னொரு பக்கம் அதிமுக பொதுக்குழு வழக்கும் வரும் ஜனவரி 4ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

விசாரணை

விசாரணை

இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து நல்ல செய்திகளாக சென்று கொண்டு இருக்கிறது. ஜி 20 கூட்டம் தொடர்பான ஆலோசனையில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி சென்றார். பாஜகவிற்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து வேறுபாடு நிலவும் நிலையில் இந்த டெல்லி பயணம் அதிக கவனம் பெற்றது. ஜி 20 கூட்டமைப்பிற்கு தலைமை வகிக்க இந்தியா தேர்வாகி உள்ளது. 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் பிரம்மாண்ட உச்சி மாநாடும் நடக்க உள்ளது. இந்த நிலையில்தான் இதை பற்றி ஆலோசனை செய்ய பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் கூட்டம் நடைபெற்றது. குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் எம்பி திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடிதம்

கடிதம்

டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கீழ், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று கூறப்பட்டு இருந்தது. மத்தியில் பாஜக அரசு இதுவரை எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று அழைத்ததே இல்லை. அண்ணாமலை, அமித் ஷா, மோடி என்று யாருமே எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று அழைத்ததே இல்லை. ஆனால் சட்டப்படி இப்போது எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர்தான். அவரின் பதவிக்கு இன்னும் இடைக்கால தடை விதிக்கப்படவில்லை. பொதுக்குழு முடிவிற்கு இன்னும் இடைக்கால தடை விதிக்கப்படவில்லை. ஆனால் இந்த முறை எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று மத்திய அரசு அழைத்துள்ளது. மோடிக்கு தெரியாமல் இந்த அழைப்பு சென்று இருக்க வாய்ப்பே இல்லை. பொதுக்குழு முடிவிற்கு இன்னும் இடைக்கால தடை விதிக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமியை முதல்முறையாக டெல்லி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று அழைத்து உள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பு இதனால் மிகுந்த குஷியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது முதல் குட்நியூஸ்.

குட்நியூஸ்

குட்நியூஸ்

இரண்டாவது குட்நியூஸ் என்று பார்த்தால் அது தேர்தல் ஆணையம் கொடுத்த குட்நியூஸ். எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த அதிமுகவின் வரவு செலவு கணக்குகளை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எடப்பாடி தரப்பினர் கொண்டாடி வருகிறார்கள். இடைக்கால பொதுச்செயலாளர் என்று கையெழுத்துப் போட்டு தாக்கல் செய்த வரவு செலவு கணக்கை அக்டோபர் 3-ந்தேதி ஒப்படைக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் கொடுத்த ஒப்புகையை (அக்கனாலெட்ஜ்மெண்ட்) தேர்தல் ஆணையம் தங்கள் இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

வாதம் வைக்கும்

வாதம் வைக்கும்

இது கிட்டத்தட்ட எடப்பாடியை தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் ஆகிறது. உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கு விசாரணை நடக்கும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு எடப்பாடிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இதை உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி வாதம் வைக்கவும் வாய்ப்பு உள்ளது. எங்களுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துவிட்டது. நாங்கள் கொடுத்த வரவு செலவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுவிட்டது. அதனால் பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பு கோரிக்கை வைக்க வாய்ப்பு உள்ளது.

மூன்றாவது குட்நியூஸ்

மூன்றாவது குட்நியூஸ்

இந்த நிலையில்தான் ஹாட் டிரிக் சிக்ஸ் போல.. மூன்றாவது குட் நியூஸ் ஒன்றும் எடப்பாடிக்கு சென்றுள்ளது. அதன்படி ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை செய்ய மத்திய சட்ட அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு சென்றுள்ளது. அந்த வகையில் அதிமுகவிற்கும் அழைப்பு சென்றுள்ளது. இதில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் அழைப்பு சென்றுள்ளது. அதாவது அதிமுகவில் இருந்து வேறு யாருக்கும் அழைப்பு செல்லவில்லை. ஓ பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு செல்லாத நிலையில் எடப்பாடிக்கு மட்டும் அழைப்பு சென்றுள்ளது. இதனால் எங்கே மத்திய அரசு எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க தொடங்கிவிட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+