சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விழித்திரை அறுவை சிகிச்சை குறித்த உலக மாநாடு.. சென்னையில் கூடிய கண் மருத்துவர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: கண்விழித்திரை அறுவை சிகிச்சையில் மாறி வரும் போக்கு குறித்து விவாதிக்க உலக மாநாடு சென்னையில் நடைபெற்றது. விழித்திரை ஆய்வுகள் மீதான தகவல்களை பரிமாற்றம் செய்யவும், அடுத்த தலைமுறைக்கான பார்வைத்திறன் ஆராய்ச்சிகளை முடுக்கி விடவும் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுளில் இருந்து கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சுமார் 600 பேர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக அமெரிக்க டாக்டர் சுனிர் கார்க் மற்றும் விஞ்ஞானி லலித் வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Have to change status in india One eye doctor for 1 lakh peoples..Governor Banwarilal purohit

இம்மாநாட்டைத் துவக்கி வைத்து பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்றைய நவீன உலகில் அனைத்து செயல்பாடுகளும் பார்வையை மையமாக வைத்தே நடைபெறுகிறது. இந்தியாவில் 2020-ம் ஆண்டுக்குள் 1.5 கோடி பேர் பார்வைக் குறைபாடால் பாதிக்கப்படுவர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

வானத்தை பார்த்தேன்.. பூமியை பார்த்தேன்.. ஆஹா.. படேல் சிலை.. அசத்திய மோடி! வானத்தை பார்த்தேன்.. பூமியை பார்த்தேன்.. ஆஹா.. படேல் சிலை.. அசத்திய மோடி!

ஆனால் தற்போதைய நிலவரப்படி கண் மருத்துவர்களோ 15 ஆயிரம் பேர் தான் உள்ளனர். இந்தியாவில் 1 லட்சம் பேருக்கு ஒரு கண் மருத்துவர் என்று உள்ள நிலையை மாற்ற வேண்டும் என்றார். மேலும் மக்களும் விழிப்புணர்வோடு செயல்பட்டு கண்ணை பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

English summary
The World Conference was held in Chennai to discuss the changing trend of eye surgery
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X