Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொது இடங்களில் விநாயகர் சிலை; அனுமதி கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகமாக இருந்து வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, தியேட்டர்கள் திறப்பு என பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஆனால் கூட்டம் கூடினால் கொரோனா மீண்டும் பரவ வாய்ப்புள்ளது என்பதால் தமிழக அரசு ஒரு சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. ஆன்மிக கூட்டம், அரசியல் கூட்டம் உள்ளிட்ட பிற கூட்டங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

HC has dismissed a case seeking permission to place a statue of Ganesha in public places in Tamil Nadu

கோவில்களில் முக்கியமான விழாக்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. இதேபோல் வெள்ளிக்கிழமை தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. வருகிற 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் கொரோனாவை கருத்தில் கொண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் இதற்கு பாஜக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

''தமிழகத்தில் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ளது. மூன்றாவதாக அலைக்கு எந்த சாத்தியக்கூறுகளும் தென்படவில்லை. இப்படி இருக்கும்போது விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தமிழக அரசு ஏன் தடை விதிக்கிறது ? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி பல்வேறு பாஜக தலைவர்களும் கேள்வி எழுப்ப தொடங்கினார்கள். தமிழக சட்டமன்றத்திலும் இந்த விவகாரம் பெரிதாக எதிரொலித்தது. பாஜக சட்டமன்ற உறுப்பினர்களான எம்.ஆர்.காந்தி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்க வேண்டும்? என்று சட்டமன்றத்தில் பேசினார்கள்.

எம்.ஆர்.காந்தி கேள்விக்கு பதில் தெரிவித்த தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ''கொரோனா பரவி விடாமல் தடுப்பதற்காக கொரோனா காலத்தில் எந்த ஒரு பண்டிகைக்கும், விழாக்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் அனைத்து மாநிலங்களுக்கும், கூறியுள்ளார். இந்த உத்தரவின்பேரிலேயே தமிழகத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

இதேபோல் பாஜகவின் நயினார் நாகேந்திரனுக்கு பதில் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா காரணமாக கோவில்களில் எந்த விழாக்களுக்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கொரோனா பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன'' என்று விளக்கம் அளித்தார். ஆனாலும் அரசின் கட்டுப்பாடுகளை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் என்று ஒரு சில பாஜகவினர் கூறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த இல.கணபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், 'கடந்த 30-ம் தேதி தமிழக அரசு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டும்; என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து பேராவது கொண்டு 'விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, 'மத உரிமைகளை பின்பற்றுவதை விட வாழ்வாதர உரிமை மிக முக்கியமானது. பொதுநலன் கருதியே இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசுபிறப்பித்துள்ள தடை உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது'என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+