சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவிஷீல்டு தடுப்பூசியால் சில பக்க விளைவுகள் ஏற்படுகிறது.. ஆனால் ரொம்ப கம்மி- சுகாதார அமைச்சகம்

Google Oneindia Tamil News

சென்னை: கோவிஷீல்டு தடுப்பூசியால் சிறு பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும், ஆனால், பிற நாடுகளை ஒப்பிட்டால் இது மிக குறைவு என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    Corona Vaccine தொடர்பான சந்தேகங்கள் | Doctor Dilipan விளக்கம்

    இந்தியாவில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் கோவிட் -19 தடுப்பூசி கோவிஷீல்ட் என்ற பெயரில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இரத்த உறைவு உள்ளிட்ட சில பக்க விளைவுகள் ஏற்பட்டாலும், அவை மிக குறைவு என்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Health ministry releases list of side effects to watch out for after taking Covishield

    கோவிஷீல்ட், கோவேக்சின், ஸ்பூட்னிக் வி ஆகியவை இந்தியாவில் அவசர ஒப்புதல் வழங்கப்பட்ட மூன்று தடுப்பூசிகளாகும். இதில் கோவிஷீல்ட் நாட்டில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் (SII) தயாரிக்கிறது.
    இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    ஆஸ்ட்ராஜெனிகா - ஆக்ஸ்ஃபோா்டு இணைந்து தயாரித்த 'கோவிஷீல்ட்' தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கு ரத்தக் கசிவு, ரத்தக் கட்டு பாதிப்பு ஏற்பட்டதாக சில நாடுகளில் நடந்த ஆய்வுகளில் தெரிய வந்தது. எனவே, இந்தியாவிலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் பிறகான பாதிப்பு தொடா்பாக அவசர ஆய்வு நடத்தப்பட்டது.

    'தடுப்பூசி பாதிப்பை அறியும் தேசிய குழு' (ஏஈஎஃப்ஐ) இந்த ஆய்வை நடத்தியது. ஏப்ரல் 3ம் தேதி நிலவரப்படி நாட்டில் 7,54,35,381 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. அதில் கோவிஷீல்ட் தடுப்பூசி 6,86,50,819 டோஸ்கள், கோவேக்ஸின் தடுப்பூசி 67,84,562 டோஸ்களாகும்.
    முதல் தவணையாக 6,59,44,106 டோஸ்களும், 2வது தவணையாக 94,91,275 டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன.

    கோவிஷீல்டு டோசேஜ் இடைவெளி.. 12-16 வாரங்களாக அதிகரிப்பு.. மத்திய அரசின் முடிவுக்கு திடீர் காரணம் என்னகோவிஷீல்டு டோசேஜ் இடைவெளி.. 12-16 வாரங்களாக அதிகரிப்பு.. மத்திய அரசின் முடிவுக்கு திடீர் காரணம் என்ன

    நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்திய பிறகு பாதிப்பு ஏற்பட்டதாக 23,000க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 700 நிகழ்வுகள் மட்டுமே தீவிரமான பாதிப்பு உடையவையாக இருந்துள்ளன. அதில் 498 நிகழ்வுகளில் தொடர்புடையோரிடம் 'தடுப்பூசி பாதிப்பை அறியும் தேசிய குழு' தனது ஆய்வை நிறைவு செய்துள்ளது.

    கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்ட 26 நிகழ்வுகளில் தொடா்புடையோருக்கு ரத்தக் கசிவு, ரத்தக் கட்டு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இது குறைவு. 10 லட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டால், அதில் 0.61 சம்பவங்களே அவ்வாறு பாதிப்பு இருப்பதாக பதிவாகிறது. இதுவே பிரிட்டனில் 4 நிகழ்வுகளாகவும், ஜொ்மனியில் 10 நிகழ்வுகளாகவும் உள்ளது.

    பாரத் பயோடெக் நிறுவன தயாரிப்பு தடுப்பூசியான கோவேக்ஸின் செலுத்தப்பட்டோரிடையே இத்தகைய பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் தடுப்பூசி செலுத்தப்பட்டு 20 நாள்களுக்குப் பிறகு ரத்தக் கசிவு, ரத்தக் கட்டு பாதிப்பு ஏற்பட்டால், தடுப்பூசி செலுத்திக் கொண்ட இடத்திலேயே அதைத் தெரிவிக்குமாறு தடுப்பூசி போட்டுக் கொண்டவ்ரகளுக்கும், சுகாதார ஊழியா்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

    கொரோனா தொற்றை தடுப்பதில் ஆற்றல் கொண்ட தடுப்பூசியாக கோவிஷீல்ட் தொடரும். கடந்த மாதம் 27ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் அந்தத் தடுப்பூசி 13.4 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி விளைவுகளை, மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது என்று அந்த அறிக்கையில் மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

    கோவிஷீல்டு தயாரிக்கும் சீரம் நிறுவன தலைவர் பூனாவல்லாவின் மொத்த குடும்பமும் இங்கிலாந்தில்! கோவிஷீல்டு தயாரிக்கும் சீரம் நிறுவன தலைவர் பூனாவல்லாவின் மொத்த குடும்பமும் இங்கிலாந்தில்!

    சில பக்கவிளைவுகள்:

    • மூச்சுத் திணறல்
    • நெஞ்சு வலி
    • கைகளில் வலி அல்லது வீக்கம்
    • தடுப்பூசி செலுத்தப்பட்ட இடத்தைச் சுற்றி சிவப்பு நிற தடிப்புகள்
    • வாந்தி அல்லது இல்லாமலோ தொடா்ச்சியான வயிற்று வலி
    • வாந்தி அல்லது இல்லாமலோ தொடா்ச்சியான தலைவலி
    • சோா்வு
    • கை உள்பட உடலின் ஏதேனும் ஒரு பகுதி செயலற்று போவது
    • வாந்தி
    • பார்வை மங்கலாக தெரிதல் அல்லது இரட்டையாகத் தெரிதல்
    • மனசோர்வு
    • மனநிலையில் அவ்வப்போது மாற்றங்கள் போன்றவை தடுப்பூசியால் ஏற்படும் சில பக்க விளைவுகள்.

    ஆனால் ஏற்கனவே கூறியபடி, உலகிலேயே இந்தியாவில்தான், இப்படியான பாதிப்புகள் மிக மிக குறைவாக உள்ளன. மருத்துவர்களை கலந்தாலோசித்தால் பக்க விளைவுகளில் இருந்து வெளியே வரலாம்.

    English summary
    According to the Ministry of Health, the Covshield vaccine causes minor side effects, but is far less than other countries.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X