மோடியா பேர் வெச்சாரு? ஆபரேஷன் சிந்தூர் ஏற்படுத்திய சிலிர்ப்பு.. தாலி கட்டினதுமே மனைவி செய்த காரியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியது. இதையடுத்து, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி தந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த புதுமணப்பெண் செய்த காரியம், அனைவரையும் சிலிர்க்க வைத்து வருகிறது.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு, இந்தியா "ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பதிலடி தந்தது.. இதில், பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

Modi Operation Sindoor Mahrashtra

நடுவானில் இந்தியா அதிரடி

உடனே இதற்கு பதிலடி தந்த பாகிஸ்தான், இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் இரவு, பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல் முயற்சிகளையும் இந்தியா நடுவானிலேயே முறியடித்து வீழ்த்தியது. பாகிஸ்தானின் ஏவுகணைகள், ட்ரோன்கள் என ஒன்றுகூட இந்திய மண்ணில் விழவில்லை.

எனினும், எல்லை மாநிலங்களில் பதற்றமான சூழலே நிலவுகிறது. ஜம்மு, ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களின் எல்லை கிராமங்களிலும், உச்சப்பட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்தவகையில்., "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயர் தொடர்ந்து தேசமெங்கும் பரவிவருகிறது. இந்த பெயருக்கு வலிமை சேர்க்கும்படியான நிகழ்வு ஒன்று மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் - பெயர்க்காரணம்

பொதுவாக திருமணங்களில் குங்குமம் என்பது முக்கியத்துவம் பெறக்கூடிய மங்கல பொருளாகும்.. தென்மாநிலங்களில் இதனை நாம் குங்குமம் என்று சொல்வதுபோல, வடமாநிலங்களில் பெண்கள் நெற்றியில் இடுவதை "சிந்தூர்" என்பார்கள்.. அதாவது இந்து கலாச்சாரத்தில் திருமணமான பெண்கள் இந்த திலகங்களை சூடுவர்.

ஆனால், பஹல்காம் தாக்குதல் 25 பெண்களின் குங்குமம் அழிந்துவிட்டது.. அதனால்தான் அதனை நினைவுகூரும் வகையில், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்று பிரதமர் மோடி பெயர் சூட்டியதாக சொல்கிறார்கள்.

சிந்தூரத்தை அனுப்பிய மனைவி

இந்த சிந்தூரத்தை அதாவது குங்குமத்தை, நம்முடைய நாட்டின் பாதுகாப்புக்காக அனுப்பியிருக்கிறார்.. மகாராஷ்டிரா மாநிலம், ஜல்கானில் உள்ளது பசோரா என்ற தாலுகா.. இங்கு வசித்து வரும் மனோஜ் தின்யானேஷ்வர் என்பவர் இந்தியா ராணுவத்தில் சிப்பாயாக பணிபுரிந்து வருகிறார்..

இவருக்கு , யாமினி படீல் என்ற பெண்ணுடன் கடந்த மே 5ம் தேதி திங்கள்கிழமை திருமணம் நடந்தது.. இதனால் கல்யாணத்துக்கு விடுமுறையில் வந்திருந்தார் மனோஜ்,.. ஆனால், மறுநாளே அதாவது செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் சூழ்ந்து கொண்டதால், விடுமுறையை ரத்து செய்துவிட்டு, உடனே டியூட்டிக்கு வருமாறு உத்தரவு வந்தது..

இந்த உத்தரவை பார்த்ததுமே, லீவை கேன்சல் செய்துவிட்டு பணிக்கு திரும்பிவிட்டார் மனோஜ். மே 9ம் தேதி நேற்றைய தினம் சத்யநாராயணா பூஜைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அனைத்து நிகழ்வுகளுமே ரத்தாகிவிட்டன.

புது மனைவி உருக்கம்

இதையடுத்து, புது மனைவியும், சொந்தபந்தங்களும், ஊர்மக்களும் என அனைவரும் திரண்டு வந்து, பசோர் ரயில்வே ஸ்டேஷனில் மனோஜை வழியனுப்பி வைத்தனர்.. கணவரை வழியனுப்ப வந்த புது மனைவி யாமினி படீல் சொல்லும்போது, "நாட்டைவிட முக்கியமானது இங்கே எதுவுமில்லை.. நாட்டை பாதுகாப்பதற்காக நான் என்னுடைய குங்குமத்தை (சிந்தூரை) இப்போது அனுப்பி வைக்கிறேன்" என்று உருக்கமாக கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+