சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாளை முழு ஊரடங்கு.. இன்றே மொத்தமாக கடைகளில் கூடிய மக்கள்.. அள்ளும் கூட்டம்.. வீடியோவை பாருங்க!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மளிகை மற்றும் காய்கறி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

Recommended Video

    ஒரு நாள் தளர்வின் போது செங்கல்பட்டு மார்க்கெட்டில் கூடிய பொதுமக்கள் - வீடியோ

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தினமும் 34 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் தினமும் பதிவாகி வருகிறது.

    தமிழகத்தில் 18,06,861 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 35873 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 448 பேர் 24 மணி நேரத்தில் பலியான நிலையில் 87,300 பேர் மொத்தமாக பலியாகி உள்ளனர். 20,046 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

    லாக்டவுன்

    லாக்டவுன்

    இதன் காரணமாக தமிழகத்தில் புதிய லாக்டவுன் விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கூடுதல் கட்டுப்பாடுகளுடன் லாக்டவுன் விதிகள் அமலுக்கு வந்துள்ளன. பழைய லாக்டவுன் கட்டுப்பாடுகளை மக்கள் சரியாக மதிக்காத காரணத்தாலும், 10 மணிக்கு பின்பும் மக்கள் வெளியே சுற்றியதாலும் தளர்வுகள் இல்லாத லாக்டவுன் தற்போது அமலுக்கு வந்துள்ளது.

    தளர்வுகள்

    தளர்வுகள்

    தளர்வுகள் இல்லாத லாக்டவுன் என்பதால் அடுத்த ஒரு வாரம் மக்கள் காய்கறி வாங்க, மளிகை சாமான் வாங்க கடைகளுக்கு செல்ல முடியாது. இதனால் நேற்றும், இன்றும் மட்டும் எல்லா கடைகளும் திறந்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று மளிகை மற்றும் காய்கறி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

    பொருட்கள்

    பொருட்கள்

    ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதுகிறார்கள். தமிழகம் முழுக்க இதனால் உழவர் சந்தைகளில் கூட்டம் அலைமோதிக்கொண்டு இருக்கின்றன. மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பொருட்களை வாங்கி செல்ல குவிந்து உள்ளனர்.

    நாளை லாக்டவுன்

    லாக்டவுன் நாளை என்பதால் இன்றே எல்லா பொருட்களையும் வாங்கி குவிக்க மக்கள் அலை அலையாக திரண்டு நிற்கிறார்கள். சென்னையில் இருக்கும் கடைகள், உழவர் சந்தைகள், மார்கெட்டுகள் அனைத்திலும் கூட்டம் அதிகமாக உள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுக்க எல்லா மாவட்டங்களிலும் இதேதான் தற்போது நிலைமை.

    பரபரப்பு

    ஒரே நேரத்தில் காய்கறிகள், மருந்துகளை வாங்க மக்கள் குவிந்ததால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் இப்படி கூட்டம் கூட்டமாக பொருட்கள் வாங்கும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல உள்மாட்டங்களில் இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல சூப்பர் ஸ்பிரெட்டர் நிகழ்வுகள் இன்று நடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    English summary
    The heavy crowd in the shops and markets due to full lockdown from tomorrow in Tamilnadu. Video shows a huge crowds in many parts of Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X