சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லத்தியுடன் குவிந்த போலீஸ்.. அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு

Google Oneindia Tamil News

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தீர்மானிப்பதற்காக அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருவதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    AIADMK அலுவலகத்தில் நடைபெற்ற MLA-க்கள் கூட்டம்.. முன்னெச்சரிக்கையாக குவிக்கப்பட்ட போலீஸ்

    எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தங்கள் தரப்புக்கு தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தேவை என்று வாதிட்டு வருவதால் கடந்த 7ஆம் தேதி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    பெண்களுக்கு டிக்கெட் விலை ரூ.2 மட்டுமே... நாமக்கல் தனியார் டவுன் பஸ் நிறுவனம் அசத்தல்..! பெண்களுக்கு டிக்கெட் விலை ரூ.2 மட்டுமே... நாமக்கல் தனியார் டவுன் பஸ் நிறுவனம் அசத்தல்..!

    எனவே 10ம் தேதியான இன்று மறுபடி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    விடாப்பிடி நிலைமை

    விடாப்பிடி நிலைமை

    இருதரப்பும் ஒருவருக்கொருவர் விடாபிடியாக இருப்பதால் வன்முறை சம்பவங்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை மூலமாக அரசுக்கு தகவல் சென்றுள்ளது. இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட சிறப்பு போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளனர்.

    லத்தியுடன் போலீஸ்

    லத்தியுடன் போலீஸ்

    லத்தி உள்ளிட்ட கலவரத் தடுப்பு ஆயுதங்களுடன் அவர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். அதனால் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.

    திடீர் டுவிஸ்ட்

    திடீர் டுவிஸ்ட்

    இதனிடையே முன்னாள் சபாநாயகர் தனபாலை எதிர்க்கட்சி தலைவராக்கலாம் என ஆலோசனை கூறி ஓபிஎஸ் திடீர் பரபரப்பை கிளப்பியுள்ளார். இதனால் இந்த விவகாரத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனபாலும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர். அவரை எடப்பாடிக்கு எதிராக திசை திருப்ப ஓபிஎஸ் முயன்றுள்ளார்.

    காவல்துறை அலர்ட்

    காவல்துறை அலர்ட்

    இப்படியாக நிலவரம் புது புது திருப்பங்களுடன் செல்வதால், காவல்துறை அலர்ட் செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில். அதே நேரம் ஓபிஎஸ் யோசனையை எடப்பாடி ஏற்கவில்லையாம். எனவே இன்னும் இழுபறி தொடர்கிறது.

    English summary
    Special task police is on duty near AIADMK office as the party yet to decide who is the leader of the opposition.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X