சென்னையில் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை.. தனியார் நிறுவனங்களுக்கும் முதல்வர் முக்கிய உத்தரவு!
சென்னை: சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் விடிய, விடிய பேய் மழை கொட்டியது. 2015-ம் ஆண்டுக்கு பிறகு 207 மிமீ மழை சென்னையில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. சென்னையின் நகர், புறநகர் என அனைத்து இடங்களிலும் பாரபட்சமின்றி மழை பெய்தது.
சென்னை எழும்பூர், கோடம்பாக்கம், தி.நகர், மீனம்பாக்கம், கிண்டி என நகர்ப்புற பகுதிகளிலும் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, எண்ணூர், தாம்பரம், வண்டலூர், திருமழிசை ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

வெள்ளகாடான சென்னை
இதனால் சென்னையில் எங்கு திரும்பினாலும் வெள்ளகாடாக காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் முழ்கி கிடக்கின்றன. தண்டவாளத்தில் வெள்ளநீர் தேங்கியதால் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்கள், மாநிங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து முடக்கம்
4 அடி வரை மழைநீர் தேங்கியுள்ளதால் சாலை போக்குவரத்து பல இடங்களில் முடங்கியுள்ளது. சென்னை விமான நிலையத்திலும் மழைநீர் தேங்கியதால் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதுமே முற்றிலுமாக முடங்கி உள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மாநில போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். பல இடங்களில் வீடுகளின் மாடி வரை வெள்ளநீர் தேங்கியதால் அங்கு சிக்கி தவிப்பர்களை படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.

பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வட சென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களையும் முதல்வர் வழங்கினார். மக்களுக்கு உதவி செய்யும்படி அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட அதனை ஒட்டிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

அரசு அலுவலங்களுக்கு விடுமுறை
இந்த நிலையில் பலத்த மழை, வெள்ளம் காரணமாக சென்னையில் அரசு அலுவலங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ' சென்னையில் அரசு அலுவலங்களுக்கு 08.11.21 அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்திவாசிய சேவை துறை தவிர்த்து அனைத்து துறைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள்
ஆவின், பொது போக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சித் துறை அலுவலகம் வழக்கம் போல் செயல்படும். தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் அல்லது வீட்டிலிருந்து பணிபுரியும் வகையில் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications