சாலை முழுக்க வெள்ளம்.. சிவப்பு ஜீப்பில் வந்து இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. சென்னையில் நேரடி ஆய்வு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

சென்னையில் நேற்று மாலையில் இருந்து தீவிர கனமழை பெய்து வருகிறது. கடந்த 12 மணி நேரமாக அங்கு பெய்யும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவில் இருந்து சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சோழவரம், தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி, எழும்பூர், அண்ணா சாலை, வடபழனி, சைதாப்பேட்டை, தி நகர், கோயம்பேடு, அடையாறு, அண்ணா நகர் ஆகிய இடங்களில் மழை பெய்து வருவதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பணிகள்

பணிகள்

இந்த நிலையில் சென்னையில் சில இடங்களில் மழை நின்றுள்ளது. இதையடுத்து வெள்ள நீர்களை வெளியேற்றும் பணிகளை அதிகாரிகள் கவனித்து வருகிறார்கள். மோட்டார் மூலம் நீர்களை வெளியேற்றும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதேபோல் சாலையில் விழுந்த மரணங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இன்று காலை 10.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தனது ஆய்வை தொடங்கினார். முதல் கட்டமாக எழும்பூரில் பல்வேறு இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதன்பின் வடசென்னை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் இன்று பிற்பகல் ஆய்வு செய்கிறார்.

11 இடங்கள்

11 இடங்கள்

இன்று காலை மட்டும் 2 இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து மேலும் 9 இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார். மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் ஸ்டாலின் கான்வாய் வாகனங்களை பயன்படுத்தாமல் குறைந்த வாகனங்களை கொண்டு சென்றார். மழை விட்டதும் இவர் களத்திற்கு வந்துவிட்டார்.

சிவப்பு ஜீப்

சிவப்பு ஜீப்

சிவப்பு ஜீப் ஒன்றில் ரெயின் கோட் அணிந்தபடி முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அமைச்சர் கே.என் நேரு, சென்னை மாநகராட்சி ஆணையர், தலைமை செயலாளர் உடன் இருந்தனர். மழை குறித்தும், தண்ணீரை வெளியேற்றுவது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் அங்கு இருந்த அதிகாரிகளிடம் உரையாற்றினார்.

ஆலோசனை

ஆலோசனை

அதேபோல் அங்கிருந்த மக்களிடமும் மீட்பு பணிகள் குறித்து உதவிகள் குறித்தும் கேட்டறிந்தார். முதல்வர் ஸ்டாலின் உடனடியாக இப்படி களத்திற்கு வந்தது அங்குள்ள மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இன்று பிற்பகல் முதல்வர் ஸ்டாலின் மழை, வெள்ளம் தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+