சென்னையில் விடிய, விடிய வெளுத்து வாங்கிய மழை... சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
Recommended Video

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதலே இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இரண்டாவது நாளாக நேற்று இரவு ராயப்பேட்டை, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. புறநகர்ப் பகுதிகளிலும் மழை நீடித்து வருகிறது. மழையால், சென்னையில் இதமான சூழ்நிலை நிலவுகிறது. மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உதகையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடியது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, வேங்கிக்கால், வேட்டவலம், கீழ்பென்னாத்தூர் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்சி அடைந்தனர். தீர்த்தமலை,ஆண்டியூர்,கோட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மிதமான மழை பெய்தது.
இதனிடையே, தமிழகத்தில் நாளை பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், விருதுநகர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 15 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications