இரவு முழுக்க வெளுத்து வாங்கிய மழை.. இன்னும் விடவில்லை.. 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரவு முழுக்க கனமழை பெய்தது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Weather Report: Heavy rain in many parts of TN|Weather Report: Heavy rain in many parts of TN|

    சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரவு முழுக்க கனமழை பெய்தது. தற்போதும் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதற்கு அருகாமையில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவானது.

    இது கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    வலிமை அடையும்

    வலிமை அடையும்

    இந்த காற்றழுத்த தாழ்வுநிலை இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று கோவையில் மாலையில் இருந்து விடாமல் கனமழை பெய்து வருகிறது. மாலை 5 மணிக்கு துவங்கி மழை இப்போதும் பெய்து வருகிறது.திருப்பூர், சேலம் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகின்றது.

    வேறு எங்கு

    வேறு எங்கு

    திருவாரூர், மன்னார்குடி, தஞ்சாவூர், வேதாரண்யம், முத்துப்பேட்டை, திருச்சி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மூன்றாவது நாளாக தொடர்ந்து மழை பெய்கிறது. சென்னையில் பல இடங்களில் இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    நிலை என்ன

    நிலை என்ன

    கன்னியாகுமரி மற்றும் சிவகங்கையில்தான் அதிகமாக மழை பெய்துள்ளது. அங்கு இரவு முழுக்க மழை பெய்தது. இன்னும் அங்கு மழை விடவில்லை. கன்னியாகுமரியில் உள்ள கடல்களும் சீற்றமாக காணப்பட்டது.

    பள்ளி விடுமுறை

    பள்ளி விடுமுறை

    தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி, கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+