அலர்ட்.. தமிழத்தில் ’இந்த’ மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்! வானிலை மையம் கொடுத்த அப்டேட்!
சென்னை : தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கும் நிலையில் வழக்கத்தை விட தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. பல ஆண்டுகள் இல்லாத வகையில் மழை பதிவு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பணிகள் தீவிரம்
இந்நிலையில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மழைநீர் தேங்காவண்ணம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி, சுகாதாரத்துறை, வருவாய்துறை உள்ளிட்ட பல்வேறு துறை பணியாளர்கள் வெள்ளத் தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications