டமால் டுமில்.. டெல்டா, தென்மாவட்டங்களில் 2 நாள் வெளுக்கப்போகும் கனமழை..மீனவர்களுக்கும் எச்சரிக்கை
சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் தென்மாவட்டங்கள் என மொத்தம் 14 மாவட்டங்களில் 2 நாள் கனமழை பெய்ய உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் இறுதியில் துவங்கியது. இந்த பருவமழை காலத்தில் மாண்டஸ் புயல் வந்தது.
இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் மழையை பெற்றன. அதன்பிறகு மழை என்பது தமிழ்நாட்டில் பல இடங்களில் மறைந்து போனது.

2 நாள் இடி மின்னலுடன் மழை
இந்நிலையில் தான் தான் டெல்டா மற்றும் தென்தமிழக மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை பெய்யும் எனவும், சில இடுங்களில் இடி, மின்னலுடன் மழை இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்த வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 610 கிலோமீட்டர் கிழக்கே நிலை கொண்டிருந்தது. இது அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு தென்மேற்கு திசையில் மெதுவாக இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

வெளுக்கப்போகும் கனமழை
இதனால் இன்று தமிழக கடலோர மாவட்டங்கள்,புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெயயக்கூடும். நாளை (டிசம்பர் 25) தமிழக கடலோர மாவட்டங்கள். புதுவை, மற்றும் காரைக்கால் பகுதகிளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி தூததுக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் கனமழை
டிசம்பர் 26ல் தென்தமிழக மாவட்டங்களின் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 2லோ் தமிழ்நாடு, புதுவை மற்றும காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
மேலும் டிசம்பர் 25ம் தேதியான நாளை வரை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள் குமரிக்கடல் பகுதகிள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதகிளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். டிசம்பர் 26ல் தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். டிசம்பர் 27 ல் குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறவாளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் . இந்த நாட்களில் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications