தொடர் கனமழையால் வடியாத வெள்ளம் - 16 மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: கனமழை காரணமாக இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை,சேலம்,கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய 16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 9ஆம்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக புதன்கிழமையன்று வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்தது. புதன்கிழமையன்று இரவு தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரத் தொடங்கியது.

வியாழக்கிழமையன்று மாலை 5 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடக்க தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் இந்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து சென்றது. அதி கனமழையோடு, தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், மழை எதுவும் இல்லாமல், தரைக்காற்றுடன் மட்டும் கரையை கடந்து இருக்கிறது.
வியாழக்கிழமையன்று பிற்பகலில் படிப்படியாக சென்னையில் மழை பெய்வது குறைந்தது. அதே சமயத்தில் காற்றின் வேகம் குறையாமலேயே இருந்தது. மாலை 5 மணியளவில் ஆய்வு மையம் தெரிவித்தபடி, சென்னை அருகே தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியது. சுமார் 2 மணி நேரமாக சென்னை பகுதியை தாழ்வு மண்டலம் முழுவதுமாக கடந்து சென்றதாக வானிலை மையம் தெரிவித்தது. அதி கனமழையோடு, தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், மழை எதுவும் இல்லாமல், தரைக்காற்றுடன் மட்டும் கரையை கடந்து சென்றது. இதனால் சென்னைவாசிகள் நிம்மதியடைந்தனர்.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது முதல் கரையைக் கடந்தது வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளநீரில் தத்தளிக்கின்றன. சாலைகள் மூழ்கியுள்ளன. குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர் கனமழை காரணமாகப் பல இடங்களில் தேங்கியுள்ள மழை நீர் முழுமையாக வடியாததால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. வெள்ளம் வடியாத பகுதிகளில் 5 நாட்களுக்கும் மேலாக மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் இன்றும் விடுமுறை அறிவித்துள்ளது. அதேபோல், கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, சேலம்,கள்ளக்குறிச்சி தருமபுரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications