Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொட்டும் கனமழை.. நிரம்பும் ஏரிகள்.. செம்பரம்பாக்கம் ஏரி 22 அடியாக உயர்வு.. உபரி நீர் திறப்பு எப்போது

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடாது வெளுத்து வாங்கும் கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏரிகள் மளமளவென நிரம்பி வருகின்றன. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழையால் விளை நிலங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் குடிநீர் ஆதாரங்களான ஏரிகள், நீர் நிலைகள் நிரம்பத் தொடங்கியுள்ளன.

Heavy rains continue to fill lakes in Chennai - Chembarambakkam lake rises to 22 feet

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து பெறப்படும் நீர் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் ஏரிகளுக்கு நீர் வந்து கொண்டு இருக்கிறது.

சென்னை பெருநகரத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி விளங்கி வருகிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3.645 டி எம் சி. செம்பரம்பாக்கம் ஏரிக்கு தற்போது நீர்வரத்து 301 கனஅடியாக உள்ள நிலையில், நீர் வெளியேற்றம் 162 கனஅடியாக உள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், உபரி நீர் திறக்கப்படுவது அதிகரிக்கும்.

கடந்த 2015 ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர், தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சென்னையில் வெள்ளநீர் சூழ்ந்தது. அதனையடுத்து மழை அதிகரிக்கும் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 22 அடி நிரம்பிய உடனேயே ஏரியின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்பட்டு விடும். உபரிநீர் திறப்பு அதிகரிக்கும்போது கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.

21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் தற்போது 18.67 அடியை எட்டி உள்ளது. சோழவரம் ஏரி நீர்மட்டம் மொத்த உயரமான 18.86 அடியில் தற்போது 14.37 அடியை எட்டி உள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் அதன் மொத்த உயரமான 35 அடியில் 30.52 அடியை எட்டி உள்ளது என்று தெரிவித்துள்ளனர். பூண்டி, புழல் ஏரிகளும் தற்போது நிரம்பும் நிலையில் உள்ளதால் அந்த ஏரிகளில் இருந்தும் விரைவில் உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+