ஊட்டியாக மாறிய சென்னை.. வெளுத்து வாங்கிய கனமழை.. ரம்மியமான காட்சிகள்.. நீங்களே பாருங்க!
சென்னை: சென்னையில் இன்று தாம்பரம், குரோம்பேட்டை பல்லாவரம், கோவிலம்பாக்கம், கீழ்கட்டளை, வேளச்சேரி, மடிப்பாக்கத்தில் கனமழை பெய்தது.இந்த கனமழையால் குளுகுளு கால நிலை சென்னையில் நிலவுகிறது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழ்நாட்டில் இன்று அதிகாலை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கனமழை பெய்தது. இடிமின்னலுடன் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெளுத்து வாங்கியது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை வேளச்சேரி, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது #ChennaiRains #rain pic.twitter.com/mkQq06QRA7
— velmurugan (@velmurugantheni) August 14, 2023
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவித்திருந்தது.
Raining in #Velachery #chennai #ChennaiRains @chennaiweather pic.twitter.com/oEHGDqz4up
— ChennaiCityNow (@ChennaiCityNow) August 14, 2023
சென்னையில் திடீர் கனமழை இன்று அதிகாலை ஏன் பெய்தது என்பது குறித்து பேசிய தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறும் போது, வளிமண்டலத்தில் மேற்கு திசை காற்றும், தென் திசைக்காற்றும் சந்தித்ததன் காரணமாகவே சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது என்றார். கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்தது என்றும் திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூரில் அதிகபட்சமாக 14 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது என்றும் கூறினார்.
Heavy rains🌧️🌧️🌧️ #keelkatlai #ChennaiRains @ChennaiRains @RainStorm_TN pic.twitter.com/o6TNLT5YrE
— Sucee1983 (@sucee1983) August 14, 2023
வானிலை மையம் சொன்னது போலவே சென்னையில் இன்று மாலை சுமார்.4.30 மணி அளவில் கனமழை பெய்தது. சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை பல்லாவரம், கோவிலம்பாக்கம், கீழ்கட்டளை, வேளச்சேரி, மடிப்பாக்கத்தில் கனமழை பெய்தது. சென்னையில் உள்பகுதிகளிலும் பலஇடங்களில் கனமழை பெய்தது. இந்த மாலை காரணமாக சாலைகளில் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி முடிந்து மாணவர்களை அழைத்து வர பெற்றோர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். சாலைகளில் தண்ணீர் தேங்கி இருந்த காரணத்தால் பள்ளங்கள் தெரியாமல் வாகனத்தை விட்டு அவதிப்படவும் செய்தனர்.
#ChennaiRains ripping now pic.twitter.com/0p5tfdAWT0
— bhaskaran(BS) (@BHASKARANSHIVAR) August 14, 2023
அதேநேரம் இதமான கால நிலை காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த வாரம் ஞாயிறு மற்றும் திங்கள் சமயத்தில் எல்லாம் மிக கடுமையான வெயிலால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். மீண்டும் கோடை காலம் வந்துவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு இருந்தது. ஆனால் இன்று பெய்த மழை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதேநேரம் கனமழை தொடர்ந்து பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக பயணங்களை மேற்கொள்வது நல்லது.












Click it and Unblock the Notifications