தமிழகத்தில் 7 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிக கனமழை - வானிலை மையத்தின் ஜில் அறிவிப்பு
வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. காரைக்கால்,புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
வட கடலோர மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டியில் 17 செ.மீ.மழை பதிவாகி உள்ளது. அனந்தபுரம், கேதார், முகையூர், திருக்கோவிலூர் 16 செ.மீ., புதுச்சேரி 15 செ.மீ. மயிலம் 13 செ.மீ. உள்ளிட்ட பகுதிகளில் மழை பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 8 சதவிகிதம் கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் இயல்பை விட 41 சதவிகிதம் கூடுதலாக பெய்துள்ளதாகவும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜூன் முதல் அக்டோபர் வரை தென்மேற்குப் பருவமழை காலமாகும். இந்த ஆண்டு சரியான நேரத்தில் தொடங்கி மழை பெய்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பின. வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதத்தில் தொடங்கியது. கார்த்திகை மாதத்தில் கடுமையான மழை கொட்டித்தீர்த்தது.
அடுத்தடுத்து உருவான நிவர், புரேவி புயல்களால் மழை கொட்டித்தீர்த்தது. சென்னை, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. மீண்டும் கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற் பயிர்கள் பாதிப்பிற்கு ஆளாகும் என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
-
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications