இதய பிரச்சனையால் உயிருக்கு போராடும் 8 வயது சிறுவன்! உங்களால்தான் காப்பாற்ற முடியும்! உதவுங்கள்
சென்னை: பிறவி இதய குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் 8 வயது சிறுவன் அமோஸை காப்பாற்ற உதவுங்கள். சிறுவன் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நீங்கள் நினைத்தால் அவரை காப்பாற்ற முடியும்.
உங்களால் முடிந்த சிறு உதவியை செய்வதன் மூலம் சிறுவனின் மருத்துவ செலவை சரி செய்ய முடியும். இந்நாட்டின் எதிர்காலம் குழந்தைகள்தான். எனவே எதிர்காலத்தை காப்பாற்ற இன்றே உதவுங்கள்.

அமோஸின் கதை துயரமிக்கது. 8 வருடங்களுக்கு முன்னர் அமோஸ் ஒரு அரசு மருத்துவமனையில் பிறந்தான். குழந்தை மிக சுட்டியாக இருந்திருக்கிறது. 20 நாட்களில் எந்த பிரச்சனையும் தெரியவில்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அமோஸ் இயல்பு வாழ்க்கையை வாழ முடியாமல் சிக்கலில் தவித்தான். மூச்சுவிடுவதில் சிரமம், மற்ற குழந்தைகளை போல ஆக்டிவாக இல்லாமல் இருந்தது இதை எல்லாம் பார்த்து பயந்த பெற்றோர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் பரிசோதித்தனர்.

அங்குதான் குழந்தையின் இதயத்தில் பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2023ம் ஆண்டு அமோஸ் மியாட் மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டான். அமோஸின் உடல் நிலை மிகவும் கவலைக்குரியதாக மாறியிருக்கிறது என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்து கூறியிருக்கின்றனர். இந்த நிலைமைக்கு Severe LVOT obstruction என்று பெயர். நிலையை உடனடியாக சரி செய்தால்தான் சிறுவனின் உயிரை காப்பாற்ற முடியும். இதனை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

அறுவை சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் வரை செலவாகும். ஆனால், அமோஸின் தந்தை முனிகிருஷ்ணன் சாதாரண கட்டுமான தொழிலாளி. அவருக்கு ஒரு நாளைக்கு சம்பளம் வெறும் ரூ.600தான். தாய் வேலைக்கு செல்வது கிடையாது. குழந்தையை முழு நேரமாக பராமரித்து வருகிறாள். இப்படி இருக்கையில் இந்த குடும்பத்தால் எப்படி உடனடியாக ரூ.3 லட்சத்தை திரட்ட முடியும்? எனவே உடனடியாக சிறுவன் அமோஸின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்.
உங்கள் ஒரு சிறிய உதவியே கூட அமோஸின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். உதவி செய்ய காலம் தாழ்த்தாதீர்கள்.












Click it and Unblock the Notifications