சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நெல்லிக் காய் ஜூஸ் தொடங்கி ப்ரூட் சாலட் வரை.. கொரோனா நோயாளிகளின் டயட்.. சொல்கிறார் டாக்டர் தீபா

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சென்னை அரசு யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் கொடுக்கப்படும் உணவு நிறைய பேர் குணமடைய உதவுகிறது என டாக்டர் தீபா பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

உணவே மருந்து என்பார்கள். ஆனால் இன்று நாம் மருந்தை உணவாக உட்கொள்ளும் நிலையில் இருக்கிறோம். இதற்கு காரணம் இயற்கையை நாம் மறந்துவிட்டு இன்று செயற்கையின் பின்னால் செல்வதால் நாம் மருந்தையெல்லாம் உணவாக உட்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது கொரோனா என்ற ஒரு உயிர்கொல்லிக்கு தடுப்பு மருந்துகள் ஏதும் இல்லை என கூறப்படுகிறது. எனினும் இதை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யவேண்டும் என்றால் நாம் இயற்கையை சார்ந்து இருத்தலே ஆகும்.

கொரோனாவால் இறந்த 72 வயது முதியவர்.. உடலை ஜேசிபி மூலம் இடுகாட்டுக்கு கொண்டு சென்ற அதிகாரிகள்!கொரோனாவால் இறந்த 72 வயது முதியவர்.. உடலை ஜேசிபி மூலம் இடுகாட்டுக்கு கொண்டு சென்ற அதிகாரிகள்!

மருத்துவக் குழு

மருத்துவக் குழு

மஞ்சள் தூள், சிட்ரிக் பழங்கள் உள்ளிட்டவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது என்பது நமக்கு தெரியும். தற்போது இது போன்ற இயற்கையான உணவுகளைத்தான் நாம் உட்கொள்கிறோம். வல்லரசு நாடுகளே கொரோனாவை தடுக்க தடுமாறி வரும் நிலையில் நம் தமிழகத்தில் நாள்தோறும் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிக்க அரசு யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.

மருத்துவமனை

மருத்துவமனை

அப்படி என்ன மாதிரியான சிகிச்சையை இந்த குழுவினர் அளித்தார்கள் என அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவமனையில் கை நுட்ப மருத்துவ துறை தலைவர் டாக்டர் தீபா அவர்களை தொடர்பு கொண்டோம். அப்போது அவர் தமிழகத்தில் உள்ள அனைத்து கொரோனா நோயாளிகள் இருக்கும் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளாக மாறிய கல்லூரிகள் ஆகியவற்றுக்கு செல்கிறோம்.

தண்ணீர்

தண்ணீர்

அங்கு நோயாளிகளுக்கு யோகா பயிற்றுவிக்கிறோம். வைட்டமின் டி கிடைக்க சூரிய குளியல் எடுக்கக் கூறுகிறோம். பின்னர் இயற்கையான உணவு முறைகள் அதே நேரத்தில் சத்தானதாக எடுத்துக் கொள்ள அறிவுறுத்தி வருகிறோம். காலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் 200 முதல் 300 மில்லி அளவுக்கு தண்ணீர் கொடுக்கிறோம்.

இஞ்சி சட்னி

இஞ்சி சட்னி

பின்னர் 6 மணி முதல் 7 மணிக்குள் நெல்லிக்காய் ஜூஸ் 200 மில்லி தருகிறோம். நெல்லிக்காய் சாறு, இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், துளசி சாறு (நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம்) எல்லாவற்றையும் 150 மில்லி தண்ணீரில் கலந்தும் தருகிறோம். இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். பின்னர் 8.30 மணி முதல் 9 மணி வரை சாமை அல்லது திணையினாலான பொங்கல் அல்லது 4 இட்லி, அத்துடன் இஞ்சி சட்னி அல்லது வெங்காய சட்னி.

வாழைப்பழம்

வாழைப்பழம்

அல்லது பச்சை பயறு, நிலக்கடலை, தேங்காய், வெங்காயம், எலுமிச்சை, மிளகு கலந்த பயறு சாலட்டையும் வழங்குவோம். கேரட், கோஸ், துருவிய இஞ்சி, வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம், எலுமிச்சை, தேங்காய், மிளகு கலந்த காய்கறி சாலட்டையும் உண்ணுமாறு அறிவுறுத்துகிறோம். பழங்கள் என எடுத்துக் கொண்டால் ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் சீசனில் கிடைக்கும் காய்கறிகள் 200 கிராம் கொடுக்கிறோம்.

ஆப்பிள்

ஆப்பிள்

11 மணி முதல் 11.30 மணிக்குள் கேரட் ஜூஸ் அல்லது பைனாப்பிள் ஜூஸ் கொடுக்கிறோம். ஒருவேளை சர்க்கரை நோயாளி என்றால் வெந்தயத்துடன் கூடிய மோரை அருந்த கொடுக்கிறோம். நெல்லிக்காயுடன் கொய்யா, ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பழத்தை அளிக்கிறோம்.

 வரகு அரிசி

வரகு அரிசி

மதியம் 1.30 முதல் 2 மணிக்குள் கை குத்தல் அரிசி, வரகு, சாமை, திணை, குதிரைவாலி ஆகிய ஏதேனும் ஒரு வகை தானியத்தை உணவாக கொடுக்கிறோம். அதற்கு சாம்பார், கீரை கூட்டு (முருங்கை கீரை அல்லது அரைக்கீரை, அல்லது சிறு கீரை), வேகவைத்த வள்ளிக் கிழங்கு, ரசம், கொத்துமல்லி கலந்து மோர், கொடுக்கிறோம்.

இரவு உணவு

இரவு உணவு

4.30 மணி முதல் 5 மணிக்குள்ளாக காலை கொடுப்பது போல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம் கொடுக்கிறோம். இல்லாவிட்டால் இஞ்சி டீ, கருப்பு கொண்டைக்கடலை, பச்சை பயறு சுண்டல், இரவு 7 முதல் 7.30 மணி வரை சப்பாத்தி 3 அல்லது கோதுமை ரவை கிச்சடி, அல்லது அரிசி பொங்கல் அதற்கு தொட்டுக் கொள்ள பருப்பு, வெங்காய சட்னி , தேங்காய் சட்னி கொடுக்கிறோம்.

Recommended Video

    கொரோனா முகாமில் இளைஞர்களின் TikTok வீடியோ
    கல் உப்பில்

    கல் உப்பில்

    இதைவிட தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீரை குடிக்க அறிவுறுத்துகிறோம், உணவுகளில் மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும். ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை கல் உப்பு கலந்த நீரால் வாய் கொப்பளிக்க வைப்பது. இவற்றை நோயாளிகளுக்கு அறிவுறுத்துவதாகவும் குணமாகி வீட்டுக்கு சென்றால் இதை முடிந்த அளவுக்கு பின்பற்றுமாறும் அறிவுறுத்துகிறோம் என்றார் டாக்டர் தீபா.

    English summary
    Here are the diet list for Corona patients by Yoga and Naturopathy HOD Dr Deepa.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X