விரட்டும் வழக்குகள்.. ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு.. பதிலளிக்க காவல்துறைக்கு ஹைகோர்ட் உத்தரவு
ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் குறித்து பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், முன்ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. அதுவரை, ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு கடந்த மாதம் 24-ம்தேதி வந்திருந்தார்.
அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.. இந்த வரவேற்பு அளிப்பது தொடர்பாக அதிமுகவினர் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர்... குறிப்பாக சாத்தூர் மாஜி எம்எல்ஏ ராஜவர்மன் மற்றும் மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

மிரட்டல்
இந்த மோதலில் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் பால்வளத் துறை அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ராமகிருஷ்ணாபுரம் கிளை செயலாளர் வீராவேரெட்டி புகார் சாத்தூர் போலீசில் புகார் தந்தார்.. அந்த புகாரின் அடிப்படையில், ராஜேந்திர பாலாஜி உட்பட 5 பேர் மீது சாத்தூர் போலீசாரும் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

முன்ஜாமீன்
இதுதொடர்பான வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யக்கூடாது என்பதற்காக ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 5 பேர் கடந்த வாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்... இந்த மனு மீதான விசாரணை நடந்தபோது, கொலைமிரட்டல் மட்டுமில்லாமல், ஆள்கடத்தல் உட்பட பல்வேறு பிரிவுகள் எப்ஆரில் பதிவு செய்யப்பட்டு இருப்பதால், ராஜேந்திர பாலாஜிக்கு முன்ஜாமீன் தரக்கூடாது என்று அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

வாபஸ்
இதையடுத்து ராஜேந்திர பாலாஜியின் தரப்பானது, முன்ஜாமீன் மனுவை வலியுறுத்துவதில்லை என்று கோர்ட்டில் தெரிவித்து அதனை வாபஸ் பெற்றுக் கொண்டது.. இறுதியில், வழக்கை விசாரித்த கோர்ட், ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. எனவே, இதே வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார் ராஜேந்திர பாலாஜி.

முன்ஜாமீன்
மேலும் தன்னுடைய முன்ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.. ஆனால், முன்ஜாமீன் கோரிய மனுவின் விவரங்களை பார்த்த பிறகு, முழுமையாக ஆய்வு செய்த பிறகு, அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறி விசாரணையை தள்ளி வைத்திருந்தனர்.

வழக்கு
இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது, வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை அதிமுக நிர்வாகியை தாக்கியதாக தொடரபட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது என்று காவல்துறைக்கு அறிவுறுத்திய நீதிபதி அறிவுறுத்தினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications