நிதி மோசடி : மாஜி எம்.எல்.ஏவுக்கு எதிரான மனுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை பதில் தர ஹைகோர்ட் உத்தரவு

எம்எல்ஏ நிதியில் மோசடி செய்ததாக மாஜி எம்.எல்.ஏவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை உறுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடி செய்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தி.நகர் சத்யாநநாராயணன் மீது தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறை 27 ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தி.நகர் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கு மாம்பலம் பகுதியில் அம்மா உள்விளையாட்டு அரங்கம் கட்ட 2016-17 ம் ஆண்டில் 5 கட்டங்களாக நிதி ஒதுக்கி ஒரு கோடி ரூபாய் செலவு செய்து முறைகேடு செய்தது.

High Court orders anti-corruption department to respond to petition against T.Nagar EX MLA

2018-19- ம் நிதியாண்டில் மேற்கு மாம்பலம்,காசி குளம் பகுதியில் கட்டிடமே கட்டாமல் 30 லட்சம் செலவு செய்தது குறித்தும், அதே போல 2017-18 ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் சட்டத்திற்கும்,அரசாணைக்கும் புறம்பாக 2 கோடி ரூபாய்க்கு வெறும் சாலை அமைக்கும் பணிகள் மட்டுமே மேற்கொண்டது தொடர்பாக சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்தாக்ஷன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்

இந்த மனுவில் தி.நகர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்திய நாராயணன் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தகோரியும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 27ஆம் தேதி இந்த வழக்குகள் குறித்தும் லஞ்சஒழிப்புத்துறை பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+