சென்னை தி நகரில் 3 மாடிக்கு அனுமதி வாங்கி 10 மாடி கட்டிய பிரபல நிறுவனம்.. இடிக்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: சென்னை தியாகராய நகர், பாண்டிபஜாரில் தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் வணிக கட்டடத்துக்கு அனுமதி பெற்றுவிட்டு, அனுமதியை மீறி, 10 தளங்கள் வரை கட்டிய ஓர் தனியார் கட்டுமான நிறுவனத்தின் கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டள்ளது. பெருந்தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற காரணத்துக்காக விதிகளை மீறியவர்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது என்று கூறி உயர்நீதிமன்றம் அரசு முக்கிய உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
சென்னையில் பல்வேறு நிறுவனங்கள் இரண்டு மாடி, 3 மாடிக்கு அனுமதி பெற்றுவிட்டு பின்னர் 7 மாடி, ஆறு மாடி என்று கட்டுவது கடந்த 20 வருடங்களில் அதிக அளவில் நடந்து வந்ததாக புகார்கள் உள்ளது. வணிக கட்டிடங்கள், குடியிருப்பு கட்டிடங்கள் என பல கட்டிடங்கள் விதிமீறலுடன் கண்டபடி கட்டப்பட்டதாக புகார்களும் உள்ளன. குறிப்பாக அசுர வளர்ச்சி அடைந்த திநகர் உள்ளிட்டபல்வேறு வணிக மையங்களில் விதிமீறல் என்பது சர்வ சாதாரணமாக இருந்தது. அதிக அளவில் நிறுவனங்கள் விதிமீறல்களில் ஈடுபட்டிருந்ததால், பெரிய சிக்கலே எழுந்தது.

அரசு அப்படி கட்டிய பல்வேறு கட்டிடங்களை மன்னித்து அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானங்களை வரன்முறை செய்ய அனுமதித்தது. இப்படி அடிக்கடி அரசிடம் விண்ணப்பித்து பல்வேறு கட்டிடங்கள் அனுமதியும் பெற்றன. ஆனால் 2015ம் ஆண்டு வெள்ளத்திற்கு பிறகு நிலைமை மெல்ல மெல்ல மாறத்தொடங்கியது. கடந்த 10 வருடங்களில் விதிமீறல்கள் மீது அடிக்கடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை, தியாகராய நகர், பாண்டிபஜாரில் தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் வணிக கட்டடத்துக்கு அனுமதி பெற்றுவிட்டு, அனுமதியை மீறி, 10 தளங்கள் வரை ஒரு தனியார் கட்டுமான நிறுவனம் கட்டியிருந்தது. மேலும் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்தை வரன்முறை செய்யக் கோரி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் (சிஎம்டிஏ) விண்ணப்பித்திருந்தது. ஆனால் அந்த விண்ணப்பம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனம் அரசிடம் மேல்முறையீடு செய்திருந்தது. அதுவும் ஒரு கட்டத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.இதையடுத்து குறிப்பிட்ட கட்டடத்துக்கு சீல் வைத்தது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA). மேலும் குறிப்பிட்ட கட்டடத்தை இடிப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி முறைப்படி நோட்டீஸ் அனுப்பியது.
இதனை எதிர்த்து பிரபல தனியார் கட்டுமான நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, கட்டுமானத்தை வரன்முறை செய்ய மறுத்து, பெருநகர வளர்ச்சிக் குழுமம், தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து வழக்கு தொடராத கட்டுமான நிறுவனம், கட்டுமானத்தை இடிக்க எடுத்த நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ளதாகக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், அனுமதில்லாமல் கட்டப்பட்ட தளங்களை எட்டு வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்கும்படி, பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானங்களை வரன்முறை செய்ய வேண்டும் என உரிமையாக கோர முடியாது என்றும் வரன்முறை சலுகையை வழக்கமான நடைமுறையாக அரசு மேற்கொள்ளக் கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். ஒருபுறம் கட்டட திட்ட அனுமதியை வலியுறுத்தும் அதிகாரிகள், மறுபுறம் அவற்றை வரன்முறை செய்யக் கோரும் விண்ணப்பங்களை ஏற்பதன் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகளை சட்டபூர்வமாக்குவதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அனுமதியில்லாமல் கட்டுமானங்கள் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்று கூறிய நீதிபதிகள். விதிமீறல் கட்டுமானங்கள் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெருந்தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற காரணத்துக்காக விதிகளை மீறியவர்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
-
துரந்தர் 2.. தமிழ்நாட்டில் தடை செய்ய கோரி வழக்கு தள்ளுபடி ஏன்.. ஐகோர்ட் தீர்ப்பு என்ன -
மிகப்பெரிய இரும்பு ராட்சசன்.. சென்னையின் 2 பெரிய பகுதிகளை இணைக்கும் கோடு! வரப்போகும் மெகா மாற்றம் -
பொதுமக்கள் கவனத்திற்கு.. சென்னை புறநகர் ரயில்கள் சேவை ரத்து.. ரயில்வே முக்கிய அறிவிப்பு -
நைட்டு ஃபுல்லா விட்டு விளாச போகுது மழை.. மதுரை உள்பட 4 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம் -
தவெக தந்த புகார்.. தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்ட பின்னணி -
சென்னை டூ நெல்லைக்கு வாரந்தோறும் சிறப்பு ரயில்கள்! கோடை லீவுக்கு இன்ப அதிர்ச்சி தந்த தெற்கு ரயில்வே -
சென்னையில் 419 வேட்பாளர்கள் போட்டி.. விஜய்யின் பெரம்பூர் தொகுதி தான் டாப்! கொளத்தில் எவ்வளவு பேர்? -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம்












Click it and Unblock the Notifications