கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை தோண்டி எடுக்க அனுமதி மறுப்பு! உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கொரோனா தொற்றுக்கு பலியானவரின் உடலை தோண்டி எடுத்து சொந்த ஊரில் மறு அடக்கம் செய்ய அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவியது. இந்தியாவில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடலை அந்தந்த மாநகராட்சி அதிகாரிகளே அடக்கம் செய்தனர்.

லட்சக்கணக்கான உயிரிழப்புகளில் சென்னை பாடியில் வசித்து வந்த ஆஸ்டின் என்பவரும் ஒருவர். கொரோனா தொற்றால் பாதிப்படைந்த இவர் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் அம்பத்தூர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், ஆஸ்டின் உடலை தோண்டி எடுத்து, சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லுக்கூட்டம் கிராமத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி ஆஸ்டின் மனைவி ஜெயா விண்ணப்பித்திருந்தார்.
இதனை கடந்த ஜனவரி 23 ஆம் தேதி மாநகராட்சி நிராகரித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஜெயா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, உடலை தோண்டி எடுத்து சொந்த ஊரில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆஸ்டினின் உடல் கண்ணியமான முறையில் அடக்கம் செய்யப்பட்டதாகவும், அந்த இடத்தில் அவரது பெயரில் சமாதியும் கட்டப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் பல இடங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பின் ஆஸ்டின் உடலை தோண்டி எடுக்க அனுமதித்தால், பல பிரச்னைகள் ஏற்படும் எனவும் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆஸ்டினின் உடலை தோண்டி எடுக்க அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஆஸ்டினின் மனைவி ஜெயாவுக்கு உத்தரவிட்டனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications