ரிதன்யாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை பார்த்து.. ஹைகோர்ட் அதிருப்தி
சென்னை: ரிதன்யாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டார் என்பது குறித்து அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. மேலும் அந்த அறிக்கையும் முழுமையாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த வழக்கு ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி கைகாட்டிபுதூரைச் சேர்ந்த ரிதன்யா என்ற 27 வயது பெண், வரதட்சிணை கொடுமை, கணவரின் டார்ச்சர் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த விவகாரத்தில் ரிதன்யாவின் பெற்றோர் புகாரின் பேரில் ரிதன்யாவின் மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி, கணவர் கவின்குமார் ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் இவர்கள் திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
அவர்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் (ரிதன்யா கணவர் வீட்டார்) சார்பில், "ரிதன்யாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என அவர் கூறியிருந்தார். மேலும் நாங்கள் இரு வீட்டாருமே பொருளாதாரத்தில் சம நிலையில் இருப்பதால் எங்களுக்கு வரதட்சிணை தேவை இல்லை.
3 ஆண்டுகளுக்கு முன்பே ரிதன்யா தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்" என வாதிட்டனர். இதையடுத்து ரிதன்யாவின் தந்தை தரப்பில், எனது மகள் தற்கொலை வழக்கில் விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும். ஜாமீன் கொடுத்தால் அவர்கள் சாட்சிகளை கலைத்துவிடுவார்கள்.
அவர்கள்தான் எனது மகளை கொடுமை செய்து தற்கொலை செய்யும் நிலைக்கு தூண்டிவிட்டனர். கவின் குமார் மனோதத்துவ ரீதியாக (மன நிலை பாதிப்பு வேறு, மனோதத்துவ ரீதியில் பாதிப்பு வேறு)பாதிக்கப்பட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்து அதிருப்தியை தெரிவித்திருந்தார். அந்த அறிக்கையில் போதுமான தகவல்களுடன் முழுமையாக இல்லை என தெரிவித்திருந்த நீதிபதி, ரிதன்யா உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்படவில்லையே?
ரிதன்யாவின் ஆடியோ பதிவு என்ன ஆனது? அந்த ஆடியோ அவருடைய செல்போனில் இருந்துதான் பதிவு செய்யப்பட்டதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அப்போது காவல் துறை, " ரிதன்யா போனில் இருந்துதான் அந்த ஆடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது. ரிதன்யா- கவின் ஆகியோரின் போன்கள் தடயவியல் சோதனைக்குள்படுத்தப்பட்டுள்ளது.
அந்த அறிக்கைகள் 10 நாட்களுக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். ரிதன்யாவுடன் படித்தவர்கள், அவருடைய உறவினர்களிடமும் வாக்குமூலம் பெற வேண்டியுள்ளது" என கூறப்பட்டது. இதையடுத்து தடயவியல் அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications