அதிமுக தேர்தலில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தேர்வானதை எதிர்த்த மனு தள்ளுபடி...ஐகோர்ட்
சென்னை : அதிமுக உட்கட்சித் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
அதிமுக உட்கட்சித் தேர்தலை கண்காணிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட இயலாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவில் விதிகளை பின்பற்றாமல் தலைமை பொறுப்பிற்கு தேர்தல் நடைபெறுவதாக ஒசூரை சேர்ந்த ஜெயச்சந்திரன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு முடித்து வைக்கப்பட்டது.
அதிமுக உட்கட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் போட்டியிட்டனர். இவர்களை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாததால் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் அதிகாரி பொன்னையன் அறிவித்தார். இந்நிலையில் ஒசூரை சேர்ந்த அதிமுக தொண்டர் ஜெயச்சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், அதிமுக தேர்தலில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தவிர போட்டியிட யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை, 1.50 கோடி தொண்டர்கள் உள்ள அதிமுகவில் வாக்காளர் பட்டியல் வெளியிடவில்லை ஓபிஎஸ் ஈபிஎஸ் மட்டுமே தேர்வாக வேண்டும் என்பதற்காக கட்சி விதிகளில் திருததம் செய்யப்பட்டுள்ளது என தனது மனுவில் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் முறையிட்டும் ஒரு பலனும் இல்லை எனவும் இருவரும் நியமனத்திற்கு ஒப்புதல் தராமல் இருக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜெயச்சந்திரன் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது கிடையாது என தீர்ப்பளித்தனர். மேலும் அதிமுக உட்கட்சித் தேர்தல் விஷயத்தில் தலையிட்டு கண்காணிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடமுடியாது எனக் கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தனர். இதே கோரிக்கையை முன்வைத்து அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.சி. பழனிசாமி அதிமுக தேர்தலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்!












Click it and Unblock the Notifications