சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கரெக்ட்டா சொன்னாரு திருமாவளவன்.. "டிட்டோ", எல்லாம் ஒரு பப்ளிசிட்டியாம்.. யாரந்த இந்து முன்னணி புள்ளி

தஞ்சாவூர் இந்து முன்னணி நிர்வாகி ஒருவர் குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: பப்ளிசிட்டிக்காக ஒரு காரியம் செய்து, இன்று குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளார் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர்.. என்ன நடந்தது?

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பின்னால் ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளதாகவும், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் ஒருமுறை கூறியிருந்தார்.

திருமாவின் இந்த குற்றச்சாட்டு, பாஜகவை கொந்தளிக்க வைத்துள்ளது.. இந்நிலையில், நம் ஒன் இந்தியாவுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை அப்போது தந்திருந்தார்...

பாஜக மீது பாய்ந்த பாமக.. கர்நாடக தேர்தல் வருதுல! மேகதாது அணை விவகாரம் - ராமதாஸ் சைலண்ட் அட்டாக் பாஜக மீது பாய்ந்த பாமக.. கர்நாடக தேர்தல் வருதுல! மேகதாது அணை விவகாரம் - ராமதாஸ் சைலண்ட் அட்டாக்

 திருமாவளவன்

திருமாவளவன்

தமிழகத்தில் தற்போது நடந்துள்ள பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில், பாஜக பின்னணியில் உள்ளதாக சொன்னீர்களே, எந்த ஆதாரங்களின் அடிப்படையில், அந்த குற்றச்சாட்டை சொல்கிறீர்கள் என்று நாம் கேள்வியை எழுப்பினோம்.. அதற்கு திருமாவளவன் விரிவான பதில் ஒன்றை நமக்கு தந்திருந்தார்.. "நிறைய மீடியாவில் இதுகுறித்த தகவல்கள் பதிவாகி உள்ளன.. ஒருவர் தன்னை தானே கையை வெட்டிக் கொண்டு, இஸ்லாமியர்தான் வெட்டிவிட்டார் என்ற புகார் தந்திருக்கிறார். கடைசியில் விசாரணையில் அவரே கையை வெட்டிக் கொண்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. அது செய்தியாகவே வந்துள்ளது.

 செருப்பு மாலை

செருப்பு மாலை

ஒருமுறை, திருப்பூர் + சென்னை என 2 இடங்களில் கார் கொளுத்தப்பட்ட சம்பவம் நடந்தது.. இந்த விசாரணையிலும், தங்கள் காருக்கு தாங்களே தீ வைத்துக் கொண்டனர் என்று செய்திகள் வந்துள்ளது.. தென்மாவட்டத்திலும் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தது.. விசாரணையில், அவரே அவர் வீட்டுக்கு குண்டு வீசியுள்ளார்.. தமிழகத்தில் இதற்கு முன்பெல்லாம் எஸ்.சிக்கு எதிரான வன்முறைகள்தான் நடக்கும்.. அதாவது, அம்பேத்கர் சிலையை அவமதிப்பது, அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போடுவார்கள், திடீரென தலித்களின் குடிசைகளை கொளுத்துவார்கள்.. இந்த வன்முறைகள் வழக்கமாக இங்கு நடக்கும்..

செம்புள்ளி

செம்புள்ளி

ஆனால், முதல்முறையாக, பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போடுவது, அண்ணா சிலைக்கு செருப்பு மாலை போடுவது, திருவள்ளுவர் சிலைக்கு காவி சாயம் பூசுவது இதெல்லாம் சங் பரிவார்களின் நடவடிக்கைகள்தான்.. இப்போதுகூட ஒரு இடத்தில், ஆ.ராசாவின் தலையை காவித்துணியால் மூடி, செருப்பு மாலை போட்டு, அவர் கையில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வைத்துவிட்டு போயுள்ளனர்.. இதெல்லாம் நமக்கு பட்டவர்த்தனமான சங் பரிவார்களின் நடவடிக்கைகள் என்பது தெளிவாகிறது" என்று நமக்கு பதிலளித்திருந்தார்.

பிரமுகர்

பிரமுகர்

இப்படிப்பட்ட சூழலில், கும்பகோணத்தில் ஒரு இந்து முன்னணி பிரமுகரை போலீசார் குண்டாஸில் கைது செய்துள்ளார்கள்.. சுய விளம்பரத்திற்காக, தன்னுடைய வீட்டின் மீது தானே பெட்ரோல் குண்டு வீசி இவர் நாடகமாடியிருப்பது தெரியவந்துள்ளது.. அவர் பெயர் சக்கரபாணி.. கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் வசித்துவருகிறார்.. இந்து முன்னணி அமைப்பின் கும்பகோணம் மாநகர செயலாளராக இருக்கிறார். கடந்த நவம்பர் 21-ம் தேதி அதிகாலையில் இவருடைய வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டதாக போலீஸாருக்கு இவரே தகவல் தெரிவித்திருக்கிறார்..

 மோப்ப நாய்

மோப்ப நாய்

இந்த புகாரின்பேரில், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா தலைமையில், தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. காவல்துறையினரின் மோப்பநாய் டபி வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. ஆனாலும், பெரிதான தடயங்கள் எதுவும் சிக்கவில்லை. மோப்ப நாய் வெளியில் சுற்றி விட்டு அவரது வீட்டுக்குள்ளேயே வந்தது. இந்நிலையில் சக்கரபாணி மீதே போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அதனையடுத்து சக்கரபாணியிடம் நடைபெற்ற விசாரணையில்தான் உண்மை வெட்டவெளிச்சமானது..

பப்ளிசிட்டி

பப்ளிசிட்டி

தன்னுடைய பெயர் பரபரப்பாக பேச வேண்டும் என்பதற்காக, ஒரு பப்ளிசிட்டிக்காக, தானே தன்னுடைய வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக சக்கரபாணி ஒப்புக் கொண்டார்... இதனைத் தொடர்ந்து போலீசார் சக்கரபாணியை கைது செய்தனர்.. இந்த நிலையில் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார்... அதனையடுத்து சக்கரபாணி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

English summary
Hindu Front leader accused of petrol bomb attack arrested by Kumbakonam police, under anti hooliganism act
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X