அவதார் நெத்தியில நாமம்? ஏங்க இது ஜேம்ஸ் கேமரூனுக்கு தெரியுமா! வான்டடாக வண்டியில் ஏறிய அர்ஜுன் சம்பத்
சென்னை : உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள அவதார் 2 படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் அவதார் படத்தில் ஆரிய பார்ப்பன சிந்தனைகள் குறித்த பல்வேறு தகவல்கள் இருப்பதாக இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் அரிய கண்டுபிடிப்பு ஒன்றினை நிகழ்த்தி இருக்கிறார்.
ஹாலிவுட் மட்டுமல்லாது உலகெங்கும் பிரபலமான இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான படம் தான் அவதார். பாண்டோரா என்ற அதி அற்புத உலகத்தை கண் முன்னே நிறுத்திக் காட்டினார்.
இதுவரை கேட்டிராத கதைக்களம், பார்த்திராத காட்சிகள் என அந்தப் படத்தின் ஜிஎஃப்எக்ஸ் மற்றும் விஷுவல் ட்ரீட்டால் இன்றளவும் அவதார் முதல் பாகம் உலக அளவில் வசூல் ரீதியாக அதற்கு முன்னர் இருந்த பல சாதனைகளை அடித்து நொறுக்கியது.

அவதார் 2
முதல் பாகத்தில் பிரம்மாண்ட மரம், வித்தியாச விலங்கினங்கள் என செடி முதல் பறவைகள் விலங்குகள் டிராகன்கள் என அந்த படம் ஏற்படுத்திய தாக்கம் இன்றளவும் மிகப் பெரிய ஆச்சரியத்தை கொடுத்து வருகிறது. முதல் பாகம் காடு என்றால் இரண்டாம் பாகம் கடல் என வித்தியாசமாக யோசித்து அவதார் 2 படத்தை தந்திருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். விஷுவல் எபெக்ட்க்காகவே படத்தை பார்க்கலாம் என பலரும் பெரிய அளவில் சிலாகித்துக் கூறி வருகின்றனர்.

இந்து மக்கள் கட்சி
அதே நேரத்தில் முதல் பாகம் அளவுக்கு இல்லை எனவும் கலவையான விமர்சனங்கள் கிடைத்து இருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை இந்த படம் ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளி வருகிறது. இந்த நிலையில் தான் அவதார் 2 படத்திற்கு புதிய வகை விளக்கத்தை கொடுத்து இருக்கிறார் இந்து மக்கள் கட்சி நிறுவனரான அர்ஜுன் சம்பத். இது தொடர்பாக அந்தக் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் ஜேம்ஸ் கேமரூன் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஹீரோ நெற்றியில் நாமம்
அதில்," ஆர்ய பிராமண சிந்தனைகளை உலகிற்கு பரப்பியதற்காக ஜேம்ஸ் கேமரூனை இந்து மக்கள் கட்சி கண்டிக்கிறது. அவதார் - சமஸ்கிருத பெயர், நீலம் - கிருஷ்ணரின் நிறம், நெற்றி - திருமண்(நாமம்), டிராகன் - கருடன், திமிங்கலம் - மட்ச அவதாரம். எலக்சிர் - அமிர்தம்" என அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதாவது ஜேம்ஸ் கேமரூனை கண்டிப்பதாக மறைமுகமாக அவர் ஆரிய பிராமண சிந்தனைகளை தனது படத்தில் குறிப்பிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

நெட்டிசன்கள் கிண்டல்
அவதார் படத்தின் முதல் பாகம் பிரம்மாண்ட வெற்றி பெற்ற நிலையில் அவதார் என்பது சமஸ்கிருத பெயர் என்று அப்போதே பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்து மக்கள் கட்சியின் இந்த பதிவுக்கு ரசிகர்களும் ட்விட்டர் வாசிகளும் என்ன பதில் சொல்வது என தெரியாமல் விழித்து வருகின்றனர். இந்த விஷயங்கள் எல்லாம் ஜேம்ஸ் கேமரனுக்கு தெரியுமா? நீங்கள் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி! என கலந்து கட்டி கலாய்த்து வருகின்றனர். மேலும் இனி என்னவெல்லாம் கேட்க வேண்டுமோ எனவும் பலரும் புலம்பி வருகின்றனர். நல்லவேலை ஜேம்ஸ் கேமரூனுக்கு இதெல்லாம் தெரியாது.. இல்லையேல் அவர் என்ன முடிவெடுப்பாரோ?
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications