ஆம்ஸ்ட்ராங் கொலையில் அதிமுக மலர்க்கொடி-20 ஆண்டுகள் காத்திருந்து கணவர் கொலைக்கு பழிவாங்கிய 'வக்கீல்'!
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் அதிமுக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் மலர்க்கொடியும் ஒருவர். அதிமுகவின் திருவல்லிக்கேணி மேற்கு பகுதி இணைச் செயலாளராக இருந்த மலர்க்கொடி தற்போது அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 2001-ம் ஆண்டு கொல்லப்பட்ட கணவர் தோட்டம் சேகர் படுகொலைக்கு 20 ஆண்டுகள் கழித்து மகன்கள் மூலம் பழிதீர்த்தவர்தான் மலர்க்கொடி என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதேநேரத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளும் தொடருகின்றன. திமுக நிர்வாகி மகன் சதீஷ், அதிமுக நிர்வாகியாக இருந்த மலர்க்கொடி, அவரது உதவியாளர் ஹரிஹரன் என கைது நடவடிக்கைகள் தொடருகின்றன. மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பாஜகவின் 'கஞ்சா' அஞ்சலைக்கும் போலீசார் வலைவிரித்துள்ளனர்.
இதனிடையே சென்னையில் நேற்று கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகியாக இருந்த மலர்க்கொடி குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக நம்மிடம் பெயர் வெளியிட விரும்பாத போலீசார் தெரிவித்த தகவல்கள்:
தோட்டம் சேகர்: சென்னை திருவல்லிக்கேணி ஜாம்பஜார் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுகவின் முகமாக வலம் வந்தவர் தோட்டம் சேகர். அப்பகுதியில் ரவுடியாக இருந்த தோட்டம் சேகர், அதிமுகவின் மேடைப் பேச்சாளராகவும் இருந்தார். தோட்டம் சேகரின் 3-வது மனைவிதான் மலர்க்கொடி. இவரது மகன்கள் அழகுராஜ், பாலாஜி.
தோட்டம் சேகர் படுகொலை: 2001-ம் ஆண்டு தோட்டம் சேகர், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சிவகுமார் என்ற ரவுடியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அப்போது மலர்க்கொடியின் மகன்கள் அழகுராஜ், பாலாஜி இருவரும் 2 வயது குழந்தைகளாக இருந்தனர். ஆனால் மலர்க்கொடியோ கணவர் தோட்டம் சேகரின் படுகொலைக்கு பழிதீர்க்க வேண்டும் என சொல்லி சொல்லியே மகன்களை வெறியூட்டி வளர்த்து வந்துள்ளார். மேலும் மலர்க்கொடியும் சட்டம் படித்து வழக்கறிஞராகி இருக்கிறார்.
2018-ல் முதல் படுகொலை: மலர்க்கொடியின் மகன்கள் அழகுராஜும் பாலாஜியும் வளர்ந்து இளைஞர்களான உடனேயே தோட்டம் சேகர் படுகொலைக்கான 'களையெடுப்புகள்" ஆரம்பமாகின. 2018-ம் ஆண்டு திருவல்லிக்கேணியில் தோட்டம் சேகர் கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அப்பாஸ் என்ற காங்கிரஸ் பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
2019-ல் கொலை முயற்சி தாக்குதல்: அப்பாஸ் படுகொலைக்கு பழிதீர்க்கும் வகையில் 2019-ம் ஆண்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இருந்து அண்ணாசாலை வழியாக மலர்க்கொடி, அழகுராஜ் சென்று கொண்டிருந்த போது அவர்கள் மீது அப்பாஸின் ஆதரவாளர்கள் ஷேக் உள்ளிட்டோர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
2021-ல் மயிலை சிவா படுகொலை: இந்த நிலையில் 2021-ம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் ரவுடி சிவகுமார் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக சிலர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களில் தோட்டம் சேகரின் மகன்கள் அழகுராஜ், பாலாஜியும் சரணடைந்தனர். அப்போது அழகுராஜ் கொடுத்த வாக்குமூலத்தில், தாம் 5 வயது குழந்தையாக இருந்த போது தந்தை தோட்டம் சேகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அந்தப் படுகொலைக்கு காரணமானவர் என்பதாலேயே சிவகுமாரை வெட்டிக் கொன்றோம் என அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்திருந்தார். அதாவது கணவர் படுகொலைக்காக 20 ஆண்டுகள் காத்திருந்து மகன்கள் மூலம் பழி தீர்த்தவர்தான் தற்போது சிக்கியிருக்கும் மலர்க்கொடி.
மலர்க்கொடிக்கு என்ன தொடர்பு?: இப்படியான பின்னணியில் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் மலர்க்கொடி கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை அதிமுகவில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஆமஸ்ட்ராங் படுகொலையில் மலர்க்கொடிக்கு என்ன மாதிரியான தொடர்பு என்பது இனிதான் தெரியவரும் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications