ஹய்யயோ.. உடம்பெல்லாம் நடுங்கி போச்சே.. அதுவும் டாய்லெட்டுக்குள்ளேயே.. அலறிய குடும்பம் பாருங்களேன்

டாய்லெட் கோப்பைக்குள் பாம்பு புகுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அழையா விருந்தாளியாக வீட்டிற்குள் நுழைந்த விஷப்பாம்பு ஒன்று, குடும்பத்தினரை படாதபாடுபடுத்தி எடுத்துள்ளது.. அந்த வீடியோதான் இது.

இணையத்தில் எப்போதும் வித்தியாசமான வீடியோக்கள் ட்ரெண்டிங்கில் உள்ளன.. அதேபோன்று இதயத்தைத் தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அதுமட்டுமின்றி பாம்புகளின் வீடியோக்கள் எந்நேரமும் வைரலாகி வருகிறது.. பாம்பை கண்டு அனைவரும் பயந்தாலும் வீடியோவாக இருந்தால் ஆர்வத்துடன் பார்க்க முன்வருகின்றனர்.

 8 அங்குலம் நீளம்

8 அங்குலம் நீளம்

அந்தவகையில் சில நாட்களுக்கு முன்புகூட ஒரு வீடியோ வைரலானது... அந்த வீட்டின் வாசலில் கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்து கொண்டிருந்தது.. சுமார் 8 அங்குல நீளம் இருக்கும்.. அந்த நேரத்தில் தாயும் குழந்தையும் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். வாசலில் இருந்த பாம்பை பார்க்காமல் சிறுவன் அதன் மீது பாய்ந்தான்... சிறுவனை பார்த்த பாம்பு ஆத்திரமடைந்து குழந்தையை தீண்ட முயன்றது.. இதை பார்த்து பயந்து போன குழந்தையின் தாய் மின்னல் வேகத்தில் ஓடி வந்து குழந்தையை தூக்கி கொண்டு தாண்டிவிட்டார். ஒரு நொடி தாமதித்தாலும் பாம்பு சிறுவனை கடித்திருக்கும்..

 ஒரே செகண்ட்

ஒரே செகண்ட்

இந்த வீடியோவை பார்த்து பலரும் உறைந்து போயினர்.. அந்த தாய்க்கு பாராட்டையும் நெட்டிசன்கள் தெரிவித்தனர்.. இதற்கு பிறகு, இன்னொரு பாம்பு வீடியோ இணையத்தில் வைரலானது.. இந்த சம்பவம் எப்போது எங்கே நடைபெற்றது என்று தெரியவில்லை.. ஒரு பெண்ணின் காதுக்குள்ளேயே பாம்பு புகுந்துவிட்டது.. இந்த வீடியோவை நம்பவும் முடியவில்லை.. நம்பாலும் இருக்கவும் முடியவில்லை.. காரணம், அந்த பெண் பாம்பு காதுக்குள் நுழைந்ததுமே, டாக்டரிடம் சென்றுள்ளார்.. டாக்டரும், ஒரு சிறிய கொரடு கொண்டு வந்து, அந்த பாம்பை மெல்ல வெளியே எடுக்கிறார்.. வீடியோவில் இது அப்பட்டமாக பதிவாகி உள்ளது..

 பாத்ரூம்

பாத்ரூம்

காதுக்குள் பாம்பு போகும் வரை அந்த பெண்ணுக்கு அது எப்படி தெரியாமல் போனது? என்ற கேள்வியை இணையவாசிகள் கேட்டு துளைத்தார்கள். இன்று இன்னொரு பாம்பு வீடியோ வைரலாகிகொண்டிருக்கிறது.. அமெரிக்காவின் அலபாமா மாகாணம் யூபாலா நகரில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்துவிட்டது பாம்பு.. ஆனால், பாம்பு உள்ளே வருவதை குடும்பத்தினர் அப்போதே கவனித்து விட்டனர்.. அதனால், கம்பை எடுத்து, பாம்பை அடித்து விரட்ட முயன்றனர்... ஆனால் அந்த பாம்பு அவர்களிடம் சிக்காமல் திடீரென காணாமல் போய்விட்டது.. எங்கே போனது என்று தெரியாமல் வீடு முழுவதும் தேடினர்..

டாய்லெட்

டாய்லெட்

வீட்டிற்குள்ளேயே இருக்கிறது என்று உறுதியாக தெரிந்தபோதிலும், எந்த இடத்தில் உள்ளது என்பதை பலமணி நேரம் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில், அந்த வீட்டின் டாய்லெட்டின் கோப்பைக்குள் பாம்பு பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ந்து போயினர்... பாம்பு இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டாலும், அந்த கோப்பைக்குள் இருக்கும் பாம்பை எப்படி வெளியே எடுப்பது என்று அடுத்த பிரச்சனை ஆரம்பமானது.. இதையடுத்து போலீசுக்கு தகவல் சொல்லி உதவி கேட்டனர்.. விரைந்து வந்த போலீசார் பாம்பை எடுக்க படாதபாடு பட்டனர்.. பாம்பை எடுக்க முயலும்போதெல்லாம், மறுபடியும் கோப்பைக்குள்ளேயே பாம்பு போய்விடுகிறது..

 பதுங்கிய பாம்பு

பதுங்கிய பாம்பு

சிறிது நேரம்கழித்துதான் மெல்ல வெளியே தலையை நீட்டுகிறது.. அதுவரை பொறுமையாக அனைவரும் காத்திருக்க வேண்டியதாக இருந்தது.. இப்படி பல முறை முயற்சி செய்துதான், உயிருடன் பாம்பை மீட்டனர்.. அதை பத்திரமாக கொண்டுபோய் காட்டுக்குள்ளும் விட்டனர்... முன்னதாக கோப்பைக்குள் பாம்பு பதுங்கி இருந்ததை பார்த்து போலீசாரே அதிர்ந்தனர்.. அவர்கள்தான் இதை போட்டோவாகவும் எடுத்து 'பேஸ்புக்'கில் பதிவிட்டனர்... அந்த பதிவுதான் வைரலாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+