சென்னையில் மீண்டும் பயங்கரம்.. மிரட்டல் இருப்பதாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்த இளைஞர் வெட்டிக்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ரூ.18 லட்சம் கடன் விவகாரத்தில் கொலை மிரட்டல் விடுப்பதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கண்ணன் என்ற தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தார். அதற்குள் மீண்டும் ஒரு பயங்கரம் கொலை சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

ரூ.18 லட்சம் கடன் விவகாரத்தில் கொலை மிரட்டல் விடுப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவொற்றியூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் பிரதீப். 28 வயதான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார்.

Horror strikes Chennai again Youth hacked to death after filing a police complaint about threats

நேற்று இரவு 9 மணியளவில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த பிரதீப்பை பைக்கில் வந்த மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டிச்சென்று தலையில் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த பிரதீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொடூர கொலை குறித்து தகவல் அறிந்த போலீசார் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று பிரதீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

கடன் பிரச்சினை ஒன்றில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தன்னை கொலை செய்துவிடுவதாக ஒரு கும்பல் மிரட்டுவதாகவும் பிரதீப் புகார் அளித்து இருக்கிறார். இந்த நிலையில்தான், பிரதீப் மர்ம நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்புதான், தவெக நிர்வாகி கண்ணன் என்பவர் தனது வீட்டின் அருகே ஓட ஓட வெட்டி படு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள் மீண்டும் ஒரு கொலை தலைநகரை அதிர வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+